மெல்லப் பறந்தது இதயம்..!!!

This entry is part 10 of 10 in the series மெல்லப் பறந்தது இதயம்

மெல்லப் பறந்தது இதயம்

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

மெல்லப் பறந்தது இதயம்..!!!

அத்தியாயம் 10

பட்டு ஜிப்பா வேஷ்டி அணிந்தபடி ஜெகதேவ்வின் தந்தை விஸ்வநாதனும், அழகான வைலட் நிறத்தில் பரந்த தங்கநிற பார்டர் சாமுந்திரிகா பட்டில் வெண்மைநிற வைரநகைகளினால் ஜொலித்த மோகனாம்பிகாவும் அவர்களது பிரம்மாண்டமான வீட்டின் வாயிலில் கலவர முகத்துடன் நின்றிருந்தனர். 

வாயிலில் கேரள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்க, வீட்டினுள்ளே ஒருபுறம் திருமண மங்கல வாத்தியங்கள் மிதமான ஒலியோடு மேளதாளத்துடன் முழங்கிக் கொண்டிருந்தது.

இருவரும் மாற்றி மாற்றி அன்றைய தினத்தின் கதாநாயகனான ஜெகதேவ் சக்கரவர்த்திக்கு மொபைலில் அழைத்துக் கொண்டிருந்தனர்.

“உன் மகனுக்கு உண்மைலயே இந்தக் கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லைன்னா முன்னாடியே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே?! கடைசி நேரத்துல ஏன் நம்ம கழுத்தறுக்கணும்?!” என ஆவேசமாகக் கத்த‌ ஆரம்பித்தவரை,

ஒரு விரல் கொண்டு இதழின் மேல் விரல் வைத்து, “ப்ளீஸ்.. ப்ளீஸ்ங்க.. சத்தம் போடாதீங்க.. ப்ளீஸ்…” என ருத்ரதாண்டவம் ஆடும் தன் கணவரை அமைதிப்படுத்த முயன்றார் மோகனாம்பிகா.

அப்போது மோகனாம்பிகாவின் மொபைலுக்கு தன் மகனிடமிருந்து கால் வரவே, வேகவேகமாக அதை அட்டென்ட் செய்தவரோ, “டேய் கண்ணா! எங்கடா இருக்க?! கரெக்டா தாலி கட்டுற நேரத்துக்கு வந்துடுவேன்னு நீ சொன்னப்போ, நா ஏதோ விளையாட்டுத்தனமா சொல்றன்னு நெனச்சேன். ஆனா முகூர்த்த நேரம் நெருங்கிகிட்டு இருக்குறப்பவும் நீ இன்னும் இங்க வந்து சேரல. என்னதான்டா நெனச்சுட்டுருக்க?!” என படபடவென பொரிய ஆரம்பித்தார்.

தனது தாயின் பதட்ட மொழிகளைப் புரிந்து கொண்டு இதழில் புன்சிரிப்புடன், “ஹலோ..ஹலோ..ஹலோ.. அம்மா.. கொஞ்சம் வாசலைப் பாருங்கம்மா. நா இங்கதா இருக்கேன்.” எனக் கூறியபடி காரின் கதவைத் திறந்து கொண்டு ஜெகதேவ் பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தபோது,

சரவெடி கொளுத்தப்பட்டு வெடிவெடிக்க ஆரம்பித்ததில் தன் மகனைக் காண முடியாமல் அவ்விடமே புகை மண்டலமாய் மறைத்து நிற்க, 

வெடி முழுவதும் வெடித்து முடித்ததும் அவ்விடத்திலிருந்து அந்தப் புகை மறையும்முன், அதிலிருந்து முளைத்து முந்திக்கொண்டு புன்முறுவலுடன் தன் தாயின் முன் வந்து நின்றவனைப் பார்த்த மோகனாம்பிகாவும் விஸ்வநாதனும் ஒருகணத்தில் தங்கள் முகத்திலிருந்த புன்னகை அனைத்தும் வடிந்தவாறு நின்றுவிட்டனர்.

“அடப்பாவி! கல்யாண நாளதுவுமா இப்டியாடா வருவ?! சரி..சரி.. அங்க ஐயர கால்ல விழுகாத குறையா நிப்பாட்டி வச்சுருக்கேன். அங்கயிங்க எஸ்கேப் ஆகுறதுக்கு முன்னாடி  நல்ல நேரத்துல கூட்டிட்டு வாடி. ஸ்ஸப்பா.. இவனல்லாம் வச்சுகிட்டு..” என தலையிலடித்தபடி வீட்டினுள்ளே சென்றுவிட்டார் விஸ்வநாதன்.

தன் மகனிருந்த கோலத்தைப் பார்த்து, தலையை சொரிந்தவாறே, “டேய்… என்னடா இது கோலம்?! அதுவும் கடைசி நேரத்துல சேன்ச் பண்ணக்கூட டைம்மில்லாம.. ஏன்டா இப்டி உயிர வாங்குற?! ஹய்யோ.. இப்ப நா என்ன பண்ணுவேன்?!” என புலம்ப ஆரம்பித்தவரை,

“ம்மாஅஅ… நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். எல்லாம் நா பாத்துக்கிறேன்.” எனத் தன் தாயின் தோள்களில் கையைத் தூக்கிப் போட்டு உள்ளே அவரை

அழைத்துச் சென்றவன், நேராக சென்று மணவறையில் சென்று அமர்ந்து கொண்டான் வாகாக.

அங்கே மணமகள் அறையில் அத்தனை அலங்காரங்களும் சிறப்பாக முடிந்து ரதிதேவியாகவே காட்சியளித்தவாறு யோசனையுடன் அமர்ந்திருந்த மதுஶ்ரீயிடம் அவசர அவசரமாக உள்ளே வந்த பானுமதி, “மது… மாப்ள வந்துட்டாரு. வா..வா.. சீக்கிரம் முகூர்த்த நேரம் முடியப் போகுதுன்னு ஐயர் அங்க ஒரேக் கத்து. ச்சை.. இந்த ஐயரையும் உங்கப்பா மாதிரியே எப்டித்தா தேடிப் பிடிச்சாரோ..” என எரிச்சலுடன் புலம்பியபடி மகளின் கழுத்தில் மாலையிட்டு மணவறைக்கு அழைத்து வந்தார்.

தலைகுனிந்தபடி தன் தாயின் இழுப்புக்கேற்றவாறு வேகமாக வந்தவளைப் பிடித்து மணவறையில் அமர வைத்ததைப் பார்த்த பிறகே, “ஹப்பாடா… எங்க நா பெத்த இம்சை எகிறி குதிச்சு எங்கயும் ஓடிருமோன்னு பயந்துட்டே இருந்தேன். என் பிசுனஸ் டீல் ஓகே ஆகிருச்சு.” என நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டார் தாமோதரன்.

மாலையுடன் அமர்ந்திருந்தவளிடம் திரும்பிப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தவன், “கெட்டிமேளம்… கெட்டிமேளம்..” என்ற ஐயரின் வார்த்தைகளுடன் மக்கள் வாத்தியங்கள் ஓங்கி முழங்க, இருவீட்டுப் பெரியோர்களின் ஆசியுடன் திருமங்கால்ய நாணை மதுஶ்ரீயின் கழுத்தில் அணிவித்து தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ஜெகதேவ் சக்கரவர்த்தி.

மாங்கல்யத்தை அணிவிக்கும் போது நிமிர்ந்து தன் மணவாளனைப் பார்த்த மதுவின் கண்களும் இதழ்களும் அதிசயித்தைக் கண்டது போல அழகாக விரிந்தது.

அங்கே அவளின் ஆசையை அச்சுபிசகாமல் பூர்த்தி செய்திருந்த ஜெகதேவ்வின் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்திருந்த மதுஶ்ரீயின் காதோரம் வந்தவன், “அப்படி பாக்காதடி.. எனக்கு என்னை கன்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறியதைக் கேட்ட மதுவின் செக்கசிவந்து அந்திவான நிறத்தையள்ளி பூசிக்கொண்டது.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக யார் கண்களுக்கும் படாமல் வெளிநாடு சென்று விட்டான் தனது ஆசைக் காதலியின் ஆசையை உயிரோவியமாக மாற்ற நினைத்து.

கடைசி நேரத்தில் வந்தால் ஒழிய, தன் தோற்றத்தைக் கண்டு தன் பெற்றோர் நிச்சயமாக ஏதும் சொல்லுவார்கள் என சரியாகக் கணித்து செயல்பட்டிருந்தான் ஜெகதேவ்.

மாலை மயங்கி, நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருக்க, தன் மகளை தேவதையென அலங்காரம் செய்தவர், மனம் நிறைந்த புன்னகையுடன் அனுப்பி வைத்தார் அவளது மணவாளன் இருக்கும் அறை நோக்கி.

மெல்லத் தயங்கியவாறே கையில் பால் சொம்புடன் உள்ளே நுழைந்தவள், அங்கே ஜெகதேவ் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தாள். சற்று நேரம் பொறுத்து மின்சாரம் தடைபட, திடுக்கெனப் பயந்தவளோ, நெஞ்சில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தாள் அசையாது.

திடீரென பின்னாலிருந்து மதுஶ்ரீயின் கண்கள் பொத்தப்பட்டதும், அரண்டு போய், “யாரு… யாரது..?” என பயத்தில் கத்தியபடி தன் கண்கள் பொத்தப்பட்ட கையைத் தொட்டதும் புரிந்தது அது யாரென்று.

ஜெகதேவ்வின் கையைத் தொட்டதும் மூச்சினை பட்டென உள்வாங்கி வயிற்றினை எக்கியமர்ந்தாள் மது. “ஹும்… நீங்க தானா?! நா எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?!” என சகஜமாகப் பேசியவளின் கண்களைப் பொத்தியாவாறே எழுப்பி,

“ஷ்ஷ்ஷ்… பேசாம வா. உனக்கொரு சர்ப்ரைஸ்..” என தன்னுடன் இருட்டில் அவளை அழைத்துக் கொண்டு சென்றான் மெதுவாக.

சரியாக சில எட்டுக்கள் எடுத்து வைத்த பிறகு, மின்சாரம் வர அனைத்து இடங்களிலும் மின்னொளி மிளிர்ந்தது. மதுஶ்ரீயை ஓரிடத்தில் நிலையாக நிற்க வைத்து, மெதுவாக தன் கையை விலக்கிவிட்டு தள்ளி நின்றான் ஜெகதேவ் சக்கரவர்த்தி.

அங்கே…….

முகத்தில் தன் மணவாட்டி ஆசைப்பட்ட அளவான ட்ரிம் செய்யப்பட்ட குறுந்தாடியுடன் தனது மனைவியின் கழுத்தில் மங்கல நாணைப் பிணைத்தவாறு மதுவைக் காதலுடன் பார்த்திருந்த ஜெகதேவ்வும், முகம் முழுவதும் இன்பப் பூரிப்புடன் தன் கணவனை நோக்கி முறுவலித்தபடி மதுஶ்ரீயும் ஆளுயர கண்ணாடி ஃப்ரேமில் ஜொலித்தபடி காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒருபுறம் இரயில்நிலைய ஆல்பமென்றால், இன்னோருபுறம் மணவறையில் எடுத்த ஆல்பம் என அவ்விரண்டும் அவ்வறையையே காதல் உயிரோவியமயமாக மாற்றியிருந்தது.

ஆனந்தத்தில் கண்கள் கலங்க, தன் ஆசையை நிறைவேற்றி அழியாத இன்ப நினைவுகளாக மனதில் பதித்த தனது கணவனிடம் திரும்பியவள் வேகமாக ஓடி வந்து ஜெகதேவ்வை இறுக அணைத்துக் கொண்டாள் மதுஶ்ரீ.

மெல்ல அவளை வாகாகத் தூக்கியவாறு, “இந்த ஆல்பத்த செட் பண்ணதா லேட்டாகிருச்சு. என்மேலக் கோவமில்லயே.” என இடையினூடே தாங்கியிருந்தக் கையினால் அழுந்தப் பிடித்துக் கொண்டு சரசமாகக் கேட்டவனின் தோளில் முகத்தை நாணத்துடன் புதைத்துக் கொண்டாள் மதுஶ்ரீ.

பௌர்ணமி இரவில் நிலவும் கூட இந்தக் காதல் ஜோடிகளின் ஏகாந்த சங்கமத்தின் நாதங்களையும் மன்மத-ரதியின் அளவில்லாத லீலை அரங்கேற்றக் காட்சிகளையும் காணத் தயங்கி மேகங்களின் உதவி நாடிச் சென்று அதனுள்ளே புகுந்து தன் கண்களை மறைத்து கொண்டது.

தன் தாயின் வாழ்வைப் பார்த்து கல்யாண வாழ்வை வெறுத்திருந்தவளோ, இப்போது கணவனின் அத்தனைத் தேவைகளையும் அருகில் இருந்து முகம் கோணாமல் செய்யும் பதிவிரதையாகவே மாறிப் போனாள் மதுஶ்ரீ.

தன் மனைவி ஆசைப்பட்ட அத்தனையையும் தன்னால் இயன்றவரை ஒன்றுவிடாமல் நிறைவேற்றி தங்களின் வாழ்வில் பலவித இன்ப அதிர்ச்சிகளை மதுவிற்கு பரிசளித்து அவளுடன் வாழ்வை அனுபவித்து வாழ ஆரம்பித்திருந்தான் ஜெகதேவ் சக்கரவர்த்தி.

                              ‌சுபம்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *