இளமை இதோ இதோ

This entry is part 1 of 8 in the series இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

இளமை இதோ இதோ

2 இளமை இதோ இதோ 

மும்பை ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கினாள் பெண்ணவள்..தன் வாழ்க்கை மாறப்போகிற இடம் என்று பெண் அறிவாளா? காத்திருக்கும் அறைக்கு சென்றவள்..குளித்து வெள்ளை நிற பாவாடை சட்டை அணிந்து சிகப்பு நிறத்தில் லால் அணிந்து..கையில் உள்ள அட்ரஸ்ஸை தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஆட்டோ டிரைவரிடம் கூற..அவர் பையா என்ற வார்த்தையை கேட்ட உடனே அவளை பயத்தோடு ஏற சொல்லி..பையா பேலஸில் இறக்க..

தன் வலது காலை எடுத்து வைத்து பையா பேலஸில் நுழைந்தாள் பாவை..

காலை கிளம்பி வந்த தேவ் சாப்பிட்டு கொண்டு இருக்க..காவலாளி வந்து ராணாவிடம் ஒரு பெண் காத்திருப்பதாக சொல்ல  ..ராணாவோ பகலில் ஏதோ புரோக்கர் அனுப்பிய பெண்தான் வந்துவிட்டார் என நினைத்து வெளியே வந்து..

அவள் கைகளை பிசைந்து கொண்டு நிற்க..ராணா வேகமாக அவளிடம் வந்தவன்..

“என்ன காலையிலேயே கிழட்டு நாய் அனுப்பி விட்டுட்டானா? ..பையா உன்ன பாத்தாரு வெட்டி போட்டுருவாறு ..போ போய்டு ராத்திரி வா” ..என்று ஹிந்தியில் சொல்ல(நாம ஹிந்தி தெரியாது போயா கோஸ்டிங்கோ)..

அவளுக்கு அவன் சொல்லிய பையா தவிர ஒன்றும் புரியவில்லை..இருந்தாலும் தன்னை வெளியே போக சொல்கிறான் என நினைத்தாள்.. 

ராணா திரும்பி உள்ளே போக..எங்கே அவன் உள்ளே  போய் விடுவானோ என்று பயந்தவள்.. ஓடி வந்து அவன் கையை பற்றி..

“அண்ணா” என்றாள்..

ராணாவோ அவள் கூறிய அண்ணன் சொல்லில் ..அவள் முகம் பார்க்க..

அவள் பயத்தில் தன் கையை எடுத்துக் கொண்டு..

“சாரி அண்ணா தெரியாம பிடிச்சிட்டேன்”..

“யார் நீ”?என்றான் ஹிந்தியில்..
அவள் பிள்ளை முகம் தவறான பெண்ணாக நினைக்க முடியவில்லை அவனால்..

அவனுக்கு தமிழ் தெரியாது என நினைத்து..

“ஐயம் திருநெல்வேலி கம் ..நோ நோ ஐயம் பிரமு திருநெல்வேலி ..டூ சீயி  தேவ்” 

அவள்  ஆங்கிலப்புலமையில் ஆங்கிலம் கண்ணீர் விட்டு அழுதிருக்கும்..ஆனால் அவள் பேசியது ராணாவிற்கு புரிந்தது..அவள் தேவ் என்று சொன்னதும் மனம் பதை பதைக்க ..அந்த சிறுபெண் மேல் இரக்கம் வர அவளை எப்படியாவது இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று..

“நீ தமிழா?”

“ஆமாண்ணா உங்களுக்கு தமிழ் தெரியுமா”?

ஏதோ அவள் கூறிய அண்ணன் என்னும் சொல் மனதில் பூந்தென்றலாக மனம் வீசியது ராணாவிற்கு..  

காதல் மட்டும்தான் பார்த்தவுடன் வரவேண்டுமா?..சகோதரத்துவமும் வரலாம் அல்லவா..அவள் தன்னை அண்ணன் என்றதும்..அவன் மனம் அவளை தங்கையாகவே நினைத்து அவளுக்கு உதவி செய்யும் நோக்கில்..

“இங்க பாருமா நீ தேடி வந்த தேவ் இங்க இல்லை ..இங்க இருக்கிறது பையா..உன் நல்லதுக்கு சொல்றேன் ..ஊர் போய் சேர்” என்று தன் பர்ஸில் இருந்து பணம் எடுத்து கொடுக்க ..அவளும் தான் தேடிவந்த தேவ் இங்கு இல்லைப்போல என நினைத்து..

கண்ணீர் கண்களை நிரப்ப..கை கொண்டு துடைத்தவள்..பணம் வேணான்ணா..”சத்தியமா இங்க அவுங்க இல்லையான்ணா” என்று கேட்க..ராணா இல்லை என்று தலையசைக்க..

அவள் அழுது கொண்டே திரும்பி நடக்க ஆரம்பிக்க ..

பெருமூச்சு விட்டு திரும்பவும் ..தேவ் வாசல் வந்து ..திரும்பி   போகும் அவளைப் பார்க்கவும் சரியாக இருந்தது..

ராணாவின் பதட்டத்தை கண்டு கொண்ட தேவ்..”கூப்பிடு அவள” என்றான்..

“இல்ல பையா அந்த பொண்ணு வீட்டு வேலைக் கேக்க வந்தா.. நா இங்க வேலை இல்லனு போக சொல்லிட்டான் பையா”..

அவன் கண்கள் தடுமாற்றமும்..வாயின் உளறவும் அவன் பொய்யின் அளவைச் சொல்ல

“அவளைக் கூப்பிட சொன்னேன்” ..என்றவன் வெளியே இருந்த நாற்காலியில் உட்கார..

ராணா இன்னும் கைகளை பிசைந்து.. தேவ் காவலாளியை கைதட்டி கூப்பிட்டு

“இப்போ போன அந்த பொண்ணு கூட்டிட்டு வா” என்க அவரும் எஜமான் கட்டளைக்கு ஓடி சென்றார்..

பெண்ணோ அழுது கொண்டே ரோட்டில் நடக்க..இனி ஊருக்கும் செல்ல முடியாது..தன் வாழ்க்கை அவ்வளவுதான். இந்த பெருநகரத்தில் ஆங்கிலம் கூட சரியாக தெரியாமல் தேவ்வை எப்படி கண்டுபிடிக்க என்று சென்றுக்கொண்டிருக்க..

“ஏய் பொண்ணு உன்னதான்” என்று காவலாளி அவளை அழைத்து பையா கூப்பிடச் சொல்லியதைச் சொல்ல ..இவளுக்கு ஏதும் புரியவில்லை என்றாலும் ..ஏதோ தேவ் பற்றி அந்த அண்ணன் கூறுவார் என நம்பி காவலாளி பின்னாடி நடக்க..

தேவ் வரும் பெண்ணை புருவம் சுருக்கி பார்த்தவன்..அவள் வந்ததும்..

“எதுக்கு இங்க வந்த? ..யார் நீ”?என்றான் கர்ஜிக்கும் குரலில்..
அவன் குரல் கேட்டு நடுங்கியவள்..வியர்த்து வழிந்த தன் கைகளை பாடையில் துடைத்துக்கொண்டு..எச்சில் விழுங்கி ராணாவைப்பார்க்க ..அவன் சொல்லாதே என்று வாய் அசைக்க கண்டு கொண்டான் தேவ்.. 

கோவம் தாறுமாறாக ஏற நாற்காலியை தள்ளிவிட்டு எழும்பி.. 

“யார் நீ? “என்றுஎன்று  கத்த  பக்கத்தில் இருந்த தூணை பிடித்துக்கொண்டு தன் மலர் வாய் திறந்தால் பெண்..

 “என் பேர் குந்தவை திருநெல்வேலியில இருந்து வந்திருக்கேன் ..தேவ் மாமா பாக்கனும்”..அவ்வளவுதான் தேவின் கண்கள் ரத்தம் கக்க பற்கள் அரைபட  அவளை நோக்கி சென்றவன்..அவள் கழுத்தில் கைகொடுத்து சுவரோடு தூக்கி பிடிக்க ..அவள் கால்கள் அந்தரத்தில் தொங்க ..விழிகள் சொருகி சாவிற்கும் வாழ்விற்கும் போராடினாள் குந்தவை..

ராணா ஓடிவந்து அவன் கைபடித்து இழுக்க அவள் கீழ் விழுந்தாள்..

கீழே கோழிக்குஞ்சு போல் பயத்தில் பம்மி இருந்த குந்தவை பார்த்த தேவ் ..

“என்னாமா நடிக்கிற?..ஹா ஹா வாசுதேவன் மகளுக்கு நடக்க சொல்லி தரனுமா?..நல்லா நடக்கிறடி..என்ன உங்க அப்பன் தேவ் நல்லா வசதியான இருக்கான் போய் அவன் பணத்தை சுருட்டிட்டு வானு அனுப்பி விட்டானா?..ச்சோ ச்சோ ஆனா பாரு ..

“நா அந்த மஞ்சா மாக்கான் தேவ்னு நினைச்சிங்களா அப்பனும் மகளும்.. அன்னைக்கு இருந்த கோழை நா இல்ல .. நா பையா இந்த மும்பை சிட்டியே எங்கையில போ போய் சொல்லு ..அவன் உயிர் என் அக்கா கழுத்தில கிடக்கிற தாலிக்காகதான்..தொங்கி கிட்டு இருக்கு.. இல்ல அப்போவே போய் சேந்திருப்பான்.. உன்ன பாத்தா அந்த நாய்தான் நியாபகம் வருது ..போ இங்க இருந்து”..என்று திரும்பி நடக்க..தன் தாய் மாமன் கண்டு கொண்டவள்.. ஓடி வந்து அவனை பின்னோடு கட்டிக்கொண்டாள்..

தேவ் ஒரு நிமிடம் அவள் செயலில் தடுமாறி..

“சீ சீ தள்ளி போ” என்று அவளை தள்ளிவிட அவளோ தன் மாமாவை கண்டு கொண்ட சிரிப்போடு ..

“மாமா “என்றாள்..

ராணாவோ தேவ் கோவம் முகத்தைக்கண்டு..அவள் பக்கத்தில் போய்..

“இங்கு பாருமா நா உன் நல்லதுக்க சொல்றேன்மா.. நீ பாக்கிற தேவ் நீ நினைக்கிற தேவ் இது இல்லமா..சொன்னா புரிஞ்சிக்க..அவர் உங்க அப்பா மேல கொல வெறியில இருக்காரு.உங்க அம்மாவுக்காகதான் உன்ன விடுறாரு ஊருக்கு போ”..

“ஆனா அண்ணா அம்மா இல்லையே ..செத்துப்போச்சி” என்றாள் கண்ணீரோடு..

தேவின் கண்கள் ஒரு நொடி தன் தமக்கைக்காக வருத்தம் காட்டியதோ?..இருக்கும் அல்லவா இரத்த பாசம்..ஆனால் அதற்காக நடந்தது அனைத்தும் மாறி விடாதே..

“என்னம்மா சொல்ற..உங்க அம்மா இறந்து போய்டாங்களா?”.என ராணா கேட்க..

“ஆமா அண்ணா அம்மா செத்து போய்ட்டாங்க..அம்மா இருக்கும் வர எப்படியோ என்ன காப்பாத்திட்டாங்க..இறந்த பிறகு அப்பா  பணத்திற்கு ஆசப்பட்டு என்ன  பண்ணையாருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க பாத்தாரு..எனக்கு வேற வழி தெரியல..அம்மா மாமா பத்தி எப்பவும் சொல்லிட்டு இருப்பாங்க.. மாமாவ எப்படி கண்டுபிடிக்கனு தெரியாம அந்த கல்யாணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாம இருந்தப்போதான்..போன மாசம் ஒரு அண்ணாதான் இங்க இருந்து வந்து தேவ் மாமா இடத்தை எங்கிட்ட சொனானாங்க  ..எப்படியோஅப்பாகிட்ட இருந்து தப்பிச்சி இங்க வந்து சேந்திட்டேன்..இனி போனா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க அண்ணா ..மாமாகிட்ட சொல்லுங்களேன் ஒரு ஓரமாக இருந்துக்கிறேன்” என்றாள் ..

இவள் சொன்னவற்றை கேட்டான்தான் தேவ் ..ஆனால் அவள் மீது ஈவு வர வில்லை ..இவள் தந்தைதானே தன் வாழ்வு திசை மாறி செல்ல காரணம்..சிறு எறும்பைக்கூட கொல்ல துணியாத தன்னை மிருகமாக மாற்றக்காரணம்..நினைக்க நினைக்க நெஞ்சு வலித்தது..  

ராணா தயங்கி தன் பையா முகம் பார்க்க..அவன் உணர்வுகள் இன்றி வேக நடையோடே கார் நோக்கி சென்றான்..இவனும் வேறு வழி இல்லாமல் அவன் பின்னாடி செல்ல ஆதரவு இல்லாதவளாக தனித்து விடப்பட்டாள் குந்தவை ..

ஆனாலும் தன் தேவ் மாமாவை கண்டு கொண்டவள் ..இனி அவனோடுதான் இருக்க வேண்டும் ..தன் தாயிற்கு செய்த சத்தியம் நியாபகம் வர.. அப்படியே அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டாள்..  

இரவு தேவ் திரும்பி வர ..இவள் மரத்திற்கடியில் படுத்து தூங்கி  கொண்டிருக்க..ராணாவை திரும்பி பார்க்க..

“சாரி பையா நா போக சொன்னேன் ..போகலை போல இப்பவே போக சொல்றேன்” என்க.

“இரண்டு நாள் வெயில்ல காஞ்சி தானா போக போறா” ..என்றவன் உள்ளே செல்ல ..கொசுக்கடியில் தூங்கும் குந்தவை அருகே சென்ற ராணா ..காரில் இருந்த ஒரு துண்டு எடுத்து அவள் மேல் போத்திவிட்டான்.. 

தேவ் உள்ளே வர ,வழக்கமாக வரும் புரோக்கர் பெண்ணோடு காத்திருக்க..

“ராணா “என்று கூப்பிட்டு பணம் “செட்டில் பண்ணு..இன்றைக்கு வேண்டாம் திரும்ப அனுப்பிடு” ..என்று விட்டு தன் அறை நோக்கி சென்றவன் ஜன்னல் திறந்து மித ஒளியில் தன் அக்கா மகளைப் பார்த்தான் ..

அவன் கண்களில் இருந்தது பாசமா? பழிவாங்கும் எண்ணமா?      

         
   

  




 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *