1 & 2 அடி என் மவுனத் தாரகையே.

This entry is part 2 of 12 in the series என் மவுனத் தாரகையே

என் மவுனத் தாரகையே

என் மவுனத் தாரகையே…

என் மவுனத் தாரகையே…

1 & 2 அடி என் மவுனத் தாரகையே.

1 & 2 அடி என் மவுனத் தாரகையே.

3. அடி என் மவுணத்திதாரகையே.

3. அடி என் மவுணத்திதாரகையே.

4 அடி என் மவுனத் தாரகையே..

4 அடி என் மவுனத் தாரகையே..

5. அடி என் மவுனத்தாரகையே..

5. அடி என் மவுனத்தாரகையே..

6 அடி என் மவுனத்தாரகையே..

6 அடி என் மவுனத்தாரகையே..

7 அடி என் மவுனத் தாரகையே

7 அடி என் மவுனத் தாரகையே

8 என் மவுனத்தாரகையே

8 என் மவுனத்தாரகையே

9 அடி மவுனத் தாரகையே….

9 அடி மவுனத் தாரகையே….

19 அடி என் மவுனத் தாரகையே..

19 அடி என் மவுனத் தாரகையே..

12 அடி என் மவுனத் தாரகையே..

12 அடி என் மவுனத் தாரகையே..

13 அடி என் மவுனத் தாரகையே

13 அடி என் மவுனத் தாரகையே

அடிஎன்மவுனத்தாரகையே
சத்யா ராகவேந்திரா
1

அடி என் மவுனத் தாரகையே…

எதிலும் புதுமை, நவ நாகரீகம், விண்ணை முட்டும் கட்டிடங்கள்,
நாட்டின் அனைத்து துறைகளின் தலைமையும் ஒருங்கே சேர்ந்து அமைந்த இடம் தலைநகரம் புது தில்லி

அங்கு மிக மிகப்பிரபலமான பிரம்மாண்டமான ஒரு IT அலுவலகம்.

” மது ஒரு காபி சாப்பிட போலாமா?”

“ஒரு பத்து நிமிஷம் நீத்து இந்த வேலைய முடிச்சுட்டு வந்துடுறேன் இல்லன்னா எல்லாம் கொலாப்ஸ் ஆயிடும் இரு இரு.. ஒரு பைவ் மினிட்ஸ்”

காபிக்கு கூப்பிட்ட சக தோழியிடம் நோவாமல்
தன் வேலையில் கவனமா இருக்கும் மது பற்றி…

அஞ்சரை அடி அழகு தேவதை, பேசும் கண், ரோஜாப்பூ உதடு, மேக்கப் போட்ட மாதிரி பளிச்சென்ற முகம், மெல்லிய உடல்வாகு மொத்தத்துல ஐஸ்வர்யாராய் தங்கச்சி, ஆனா கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாத புள்ள… தானா வம்புக்கும் போகாது. எந்த வம்பும் வாங்காது. எல்லாருக்குமே உதவி செய்யுற அழகான அறிவான அழகு தேவதை. படிப்பாளி !!

இந்தியாவிலேயே டாப் ரேங்கில் இருக்கிற ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடராக எடுத்தவுடனே கேம்பஸ்இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வந்த தூய தமிழ் பொண்ணு இப்போ தில்லி வாசம்…

கேன்டீன்ல,

“ஹாய் மது என்னப்பா மண்ட காயுதா நீ கூட காபி குடிக்க வந்துட்ட?” என வேறு பிரிவை சேர்ந்த மம்தா கேட்க ..

“இந்த அர மண்டயன் கிட்ட வேலை செஞ்சா எல்லாருக்கும் ஸ்ட்ரெஸ் தானா வந்திரும்
குடுக்கும் சம்பளத்துக்கு மேல வேலை செய்து அவனுக்கு கோடி கோடியா சம்பாரிச்சு தர்றோம் ஆன நமக்கு மட்டும் சம்பளம் அதேதான்.” என ரியா இடையில் வர..

“கொஞ்சம் ஜாஸ்தி குடுத்தா என்ன? கஞ்ச பிசுநாரி” என வேதா

“அட போயா அள்ளி குடுக்க வேணாம் கிள்ளியாவது குடுக்கலாம் இல்ல ” இன்னொரு ஆள் அந்தாஷ்ரியா தொடர்ந்து குறை பாட..

MD ஐ பத்தின புலம்பல்கள் எல்லாம் கேட்ட மது தன் முத்து மூரல்கள் பூவாய் விரியக் சிரித்தபடி

“கைஸ் இத அவர்கிட்ட யாராச்சு சொல்லுங்க பாக்கலாம்? ம்ம்ம்”
நக்கலாய்

“நேர்ல பார்த்தா உங்கள மாதிரியாரும் இல்ல சார் னு சொல்ல வேண்டியது ,
இங்கே புலம்ப வேண்டியது உங்கள திருத்த முடியாதுடா !
என்று சிரித்தவாறே தன் சீட்டுக்கு திரும்ப போனவளை..

“மது ஒரு நிமிஷம்.. இங்க வாயேன்” என கூப்பிட்ட சுதாகரை பார்த்தவள்
அ
ப்பா!.இப்போ தான் தமிழையே கேக்க முடியுது. இவங்க கிட்ட இந்த அரைகுறை ஹிந்தி பேசி எனக்கு நாக்கு தள்ளுது! மனதுள் பேசி..

“சொல்லுடா என்ன மேட்டர் உன் ஆளு இருக்காளா இல்ல இன்னும் பீலிங்ஸ் ஆப் இந்தியாவா? ”

“உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறதா நினைக்கிறா”

” மது.. டீம் லீடர் ரோல் ரொம்ப கஷ்டம் அதுல அவளோட வேலை யும் சேர்த்து பண்ற,
. எப்ப பார்த்தாலும் வேலை பண்ணிக்கிட்டு இருக்கிறனு ரொம்ப வருத்தப்படறா”

“சரியான லூசுடா அவ
விடு விடு..மேடம் இப்ப எங்க இருக்காங்க?”

“ஜூஸ் ஷாப் ல ….. ஒரு மணிநேரமா ஒரு ஜூஸ் வைத்து அளந்து இருக்கா.. வா அவளுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுப்போம்”

“ஹாய் கிரி”

“என்னடி பண்ற?”

ரொம்ப பீல் பண்றியாமே???
வேணா ஒண்ணு பண்ணலாம் நாளையிலிருந்து நீ டீம் லீடர் ஆயிக்கோ !!.. நீயே எல்லா வேலையும் பார்த்துக்கோ!!!!!
எப்படி என் ஐடியா? என்று மது பவ்யமா கேட்க

“அய்யய்யோ.. மது என் வேலையே என்னால செய்ய முடியல…….நானே மார்னிங் சிக்னஸ்ல சிக்கி கிடக்கிறேன் இதுல இப்படியெல்லாம் ஒரு குண்டைத் தூக்கிப் போடுறியே நியாயமா?? தெய்வமே” அலற

பின்ன என்னடி?? சொன்ன பேச்சைக் கேட்காமல் தேவையில்லாம வருத்தப்பட்டு இருக்க? இது வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் என்பது கூடவா உனக்கு தெரியாது?? ,லூசு மாதிரி பிஹேவ் பண்ணாத!!!!!
இது உனக்கு லாஸ்ட் வார்னிங்.!!!
புரியுதா?”
இம் ம்….

“சாரிடா மது….”

“ஓகே”

“அந்த ஜூஸ குடி முதலில் ”

“முடியல மதுவும் எதுவுமே பிடிக்கவே மாட்டேங்குது” அவள் மழலையா மிழற்ற

“அப்போ டீம் லீடர் போஸ்ட் கன்பார்ம் கிரி”

“தாயே நான் குடிச்சுட்டேன்’

அது!! நாங்கள்லாம் அப்பவே அப்படி எங்க கிட்டேயவா ?
கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என மது சொன்னவுடன்

என்னது!!!!

நித்தி வீடியோவ பார்க்கிறதா?

ஒய் திஸ் கொலவெறி மது

திஸ் மீ .. தட் மீமிமிம்மிமீ மீ மீ என
மூவரும் சிரிக்க கிரிஜா வை பார்த்து.. மது

இது நல்ல பொண்ணுக்கு அழகு இப்படி சிரிச்சிட்டே போய் வேலையை பாரு .. ஹேய் முடிந்தது மட்டும் செய் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத ஓகே!!!!

என்று செல்லும் மதுவை பார்த்தபடியே நீத்துவிடம் வந்த கிஷோர்,

ப்ளீஸ் யா எப்படியாவது மது கிட்ட என்ன பத்தி சொல்லு லவ் பண்றேன்னு சொல்லு ப்ளீஸ்..ஷி இஸ் எ அடோரபில் பிரின்சஸ் !!!! சொல்லுயா.. என கெஞ்ச

மது கிட்ட எந்த விஷயமானாலும் பேசலாம் இதைத்தவிர
அப்புறம் நீ வேற மதுவை பார்ப்ப ஜாக்கிரதை! அப்புறம் உன் இஷ்டம், என்னை ஆள விடு……,
என் ஃப்ரெண்ட்ஷிப் லையே பிராபளம் ஆயிடும் சாரி கிஷோர்

என நீத்து கிளம்ப

“வா மச்சான் தெரிஞ்ச விஷயம் தானே நீயும் எப்ப பார்த்தாலும் இப்படி பல்பு வாங்குவது வேலையா வெச்சிருக்கே கொஞ்சம் விட்டுப் புடிக்கலாம் வா” நீரஜ் ஆறுதல் சொல்லி எல்லாரும் கேபின் திரும்பிய சமயம்

ஹாய் கைய்ஸ்,,,
ஒரு அவசர மீட்டிங் எல்லாரும் ஒரு 10 நிமிஷம் மீட்டிங் ஹாலுக்கு வாங்க என்ற அரைமண்டையன் அழைப்பை தொடர்ந்து,

அழைத்த எம்டி மிஸ்டர் ராம்சந்தர் அங்கு இருக்க
அவருடன் நம்ம ஹீரோ ஆதித்தியன்,
படிப்பாளி அறிவாளி அத விட செம ஷார்ப் மைண்ட் ஆளு.. அழகன், நல்ல உயரம்,, உயரத்துக்கு ஏற்ற சரியான உடல் ,ஜிம் பாடி குட்டி தாடி , லேசர் கண்ணு , புருவத்துக்கு மேல ஒரு அழகான மச்சம் அரவிந்த்சாமி மாதிரி ,கூர் நாசி நம்ம மண்ணுக்கே உரித்தான களையான முகம் நிறம் மொத்தத்துல மகேஷ் பாபு மாதிரி ஓர் ஹாண்ட்சம் பெர்சனலிட்டி..

“எம்டி எதுக்கு கூப்பிட்டாரு என்று தெரியாது.. ஆனா புதுசா வந்திருக்கிற ஹீரோவை பார்த்து எல்லா பொண்ணுகளும் வாய பிளக்க

“வாயில ஈ போகுது மச்சான் அதுகூட தெரியாம ஜொள்ளு வி டரத பாருடா கடவுளே உனக்கு நாங்க என்ன குறை வெச்சோம் ஏன் எங்களுக்கு மட்டும் இந்த சோதனை? என பசங்க காதுல புகையாக போக

ராய் கிட்ட நீரஜ், மச்சான் யார்ரா இவன் நமக்கெல்லாம் ஆப்பு வெச்சு விடுவான் போல இருக்கு
இப்படி அநியாயத்துக்கு ஹேண்ட்சமா இருக்கானே என புலம்ப

இத்தனைக்கும் நடுவுல ரெண்டு ஜோடி கண்களின் பரிவர்த்தனை யாருமே பார்க்கவில்லை !

அதுல ஒரு ஜோடி கண்ணில் காதல், அளவிடமுடியாத மகிழ்ச்சி பாசம் நிம்மதி கடைசியில கோபம் துரோகம் பின் வெறுப்பு எல்லாம் ஒரே நிமிஷத்துல வந்துட்டு அப்படியே ஃப்ரீஸ் ஆயிடுச்சு..

ஹாய் கைஸ்.. நேரடியா விஷயத்துக்கு வரேன்,
இனிமேல் இந்த கம்பெனிய வழி நடத்த போறது கம்பெனியோட ஒன் ஆப் த டைரக்டர் மிஸ்டர் ஆதித்யா.. இதுவரைக்கும் நீங்க எனக்கு கொடுத்த ஆதரவை இவருக்கும் தருவீங்க என்கிற நம்பிக்கையோடு நான் இன்னைக்கு ரிலீவ் ஆகிறேன் ,இன்னைல இருந்து மிஸ்டர் ஆதித்யா பொறுப்பு எடுத்துக்க போறாரு,
ப்ளீஸ் மிஸ்டர் ஆதித்யா கேரி ஆன்”என்றதும்

” ஹாய் ஃபிரண்ட்ஸ்,,, குட் டே டு யு ,நைஸ் டு மீட் யு ஆல்,
உங்கள பத்தி மெல்ல மெல்ல.
. தெரிந்து கொள்கிறேன்.
இன்று சொல்ல விரும்புவது.
எனக்கு நேர்மை மற்றும் காலம் தவறாமை ரெண்டும் ரொம்ப முக்கியம் தேங்க்யூ ….( மணி பார்க்காமலேயே)
10 நிமிஷம் முடிஞ்சுது.நீங்க உங்க இடத்துக்கு போகலாம்.
சொன்னவன் அனைவரையும் ஓர் ஆளுமையோடு பார்க்க

பதிலுக்கு.. ஒருமித்த குரலில் வாழ்த்து சொன்னவர்கள்
அவரவர் இடத்திற்கு விரய
அதுவரை அசையாது மரம் போல் நின்றவளை பார்த்து..

மிஸ் மதுமதி என் கேபின் கு வாங்க, என கூறி புயல் போல் சென்றவனின் முதுகை
பார்த்த கண்களில் கண்ணீர் படலம்

******
ஹேய் மது என்ன ஆபீஸ் போகலையா ?

இல்ல சுதாகர் இன்னிக்கு லீவ் னு மெயில் அனுப்பிச்சிட்டேன்
எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் சொன்ன மதுவை வித்தியாசமாக பார்த்தவன்

சம்திங் ராங் மதூ!.. அது மட்டும் எனக்கு தெரியுது என்ன விஷயம் னு.. ஆபீஸ்ல கண்டுபிடிச்ச சொல்றேன் பய்!

சென்றவனையே பார்த்தவள்
உன்னால முடியாது சுதாகர் கஷ்டப்படாத என நினைத்தவள் ..

அம்மாவிடம் பேசணும் போல் தோன்ற, அடுத்த நிமிடம் கை தானாக செல்லை தொட்டுட்டது

“ஹலோ அம்மா எப்படி இருக்க…. ”

“என்னடா குட்டி இந்த டைம் கூப்பிடுற ஆபீஸ் போகலியா?”

“கொஞ்சம் உடம்பு சரியில்ல மா”

“பொய் சொல்ல கூடாது மது, உடம்பு சரியில்லையா மனசு சரியில்லையா? அம்மா கிட்டே பொய் சொல்றியா?”

“இல்லம்மா இன்னைக்கு பீரியட்ஸ் ஆனேன் ரொம்பவயிறு வலிக்குது அதனால் லீவு போட்டுட்டேன்”
“அப்படியா குட்டி சரி கொஞ்சம் வெந்தயம் மோர் சேர்த்து குடி
ரெஸ்ட் எடுடா தூங்கு அம்மா அப்புறம் கூப்பிடுறேன்”

“ஓகே பை மா” மனதினுள்….
சாரிமா மனசுதான் சரி இல்ல
மாமா ஞாபகமாகவே இருந்துச்சு
சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும் அதான் சொல்லலை
இன்னிக்கி நான் பெரிய மனுஷி ஆன நாள்
எனக்கு மாமா வந்து பச்சை குடிசை காட்டினான்……..
நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னான்…………
முதல் முதலா மாமாவோட பார்வைல நான் காதலை பார்த்த நாள்!!!!!!!!!!!!!!!
அந்தக் கண்ணனின் கண்கள் ஆயிரம் கதைகள் பேசுற மாதிரி
என் கண்ணனின் கண்களும் ஆயிரம் கதைகள் பேசின நாள்
எனக்கு எல்லாமாகவும் இருப்பான்னு அவன் கண்ணு எனக்கு உணர்த்தியது
அந்தக் கண் மறக்க முடியுமா?????
அந்தப்பார்வை சாகுற வரைக்கும் மறக்க முடியாது மா
மாமாவோட அந்த முகம் அப்படியே மனசுல பதிஞ்சு,,
அது வரைக்கும் என் கூட விளையாடுற ஒரு தோழனாக இருந்தவன்,,,, அந்த நாளிலிருந்து எனக்கு காவலனாகவும் மாறி, அனைத்தும் ஆகவும் மாறி,
பத்தே நாளில் மாமாவோட அன்பு, காதலையும், புரிஞ்சு வானத்தில் பறந்து, அப்புறம் திடீர்னு எல்லாம் மாறி.. மாமா முழுசா எனக்கு இல்லாம போயி
தவிச்சுகிட்டு இருக்கேன் மா
என்னோட உணர்வுகளை யார்கிட்டயும் நான் பகிர்ந்து கொள்வதில்லை
ஏன்னா அது மாமா வை கஷ்டப்படுத்தும்
இன்னைக்கு என் மனசு ஒரு நிலையில் இல்லை மா..’………… என நினைத்தவள்,

எப்பவும் மனசு ரொம்ப கஷ்டப் படுறப்ப கேக்குற பாம்பே சிஸ்டர்ஸ் உடைய கண்ணனை காண்பது எப்போ? பாடலை ப்ளே பண்ணி அமர்ந்தவள் கண்களிலோ கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது,!!!!!!!…………
ஏன் மாமா இப்படி பண்ணின?
உனக்கு என்ன கொஞ்சம் கூட என்-ஞாபகம் இல்லையா ?
இல்ல இல்லாத மாதிரி நடிக்கிறியா?
என் மேல எவ்வளவு பாசமா இருப்ப!!!!
இப்போ யாரோ மாதிரி இருக்கியே?
உனக்காக இப்ப வரைக்கும் முழுசா நம்பி காத்துட்டு இருக்கேனே என் காதல் உனக்கு புரியலையா?
எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியே என்னை காதலிச்சவன் நீ!!!!!!!!!!!
ஆனா இப்போ ??????
மனசு வலிக்குது மாமா………….
மனசு முழுக்க வலியை வச்சுட்டு வெளியில சிரிச்சுகிட்டு இருக்கேன்
எவ்வளவு நாள் இப்படி இருக்கிறது மாமா?
உன் வாழ்க்கை யில என்னுடைய காலம் முடிஞ்சு போச்சா?
எதுவும் புரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன் மாமா
உன்னோட ஒரு வார்த்தைக்காக ஏங்கி காத்துகிட்டு இருக்கேன்
நீதான் எனக்கு எல்லாம் னு உனக்காக காத்துகிட்டு இருக்கேன்
ஆனால் நீ எனக்கு கொடுக்கிறது வலிகள் மட்டுமே ஏன் மாமா?.என்று நினைத்து நினைத்து அழுதவாறு தூங்கிவிட்டாள்

கனவில்…

பாப்பு, பாப்பு,
” எழுந்திரு இன்னும் என்ன தூக்கம் ”
நம்ம போய் மோட்டார் பம்ப் ல விளையாடிட்டு வரலாம் என ஆதி கூப்பிட ,
“போ மாமா எப்ப பார்த்தாலும் நான் தூங்கிய பிறகு எழுப்புற எனக்கு தூக்கம் தூக்கமா வருது”,
“நீதான நீச்சல் கத்துக்கணும்னு சொன்ன ?”
“சரி இன்னைக்கு சொல்லிக் கொடுக்கலாம்னு நினைச்சேன், வேண்டாம்னா போ”,
.சொல்லிய ஆதி கிளம்ப
” மா மா, மா மா”,
“நில்லு நில்லு நில்லு “.
” நானும் வரேன் எனக்கு சொல்லிக் கொடு”
என்று சிறுபிள்ளை போல் வந்த வந்த பாப்புவை பார்த்த ஆதி
” இப்ப எங்கபோச்சு உன்-தூக்கம்? ம்ம்ம்ம் ?”
” காக்கா தூக்கிட்டு போயிருச்சு மாமா” என குழந்தையாய் மிழற்ற
” அடிங்க”
“. இந்த வாய் மட்டும் இல்ல உன்ன நாய் கூட மதிக்காது டி”
என கூறியபடியே அவளுடன் நடந்த செல்லும்போது

“ரெண்டுபேரும் ஜோடியா எங்க போறீங்க? “என வசந்தி அத்தை கேட்க
” நீச்சல் கத்துக்க போறேன் அத்தை”
” யாரு உனக்கு சொல்லித்தரப் போறா? ”
“மாமா சொல்லித்தர போறாங்க ”
“அது சரி!!” என்று தாவாயில் கை வைத்தபடி
முளைச்சு மூணு இலை விடல ரெண்டு சேர்ந்து ஊர் சுத்தரத பாரேன் விளங்கிடும்!
“தம்பி இது உங்க அம்மாக்கு தெரியுமா?”
“இல்ல சித்தி சும்மா சும்மா பாப்புவயே திட்டிட்டு இருப்பாங்க அதான் சொல்லலை”

“என்ன பிரச்சனை அங்க?” என பாட்டி கேட்க
ஒன்னும் இல்லமா ரெண்டு பேரும் எங்க போறீங்க ன்னு கேட்டேன் நீச்சல் கத்துக்க போறாளாம்
தம்பி தான் சொல்லி தருதாம்
அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்…..
” ஏன் பாப்பு அப்படியா நீச்சல் கத்துக்க போறியா?”
“ஆமா பாட்டி”
” சரி போ”
“தம்பி பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாடா”

” ஏண்டி அவளை கட்டிக்க போறவன் தானே சொல்லிக் கொடுக்கிறான் ,வேற யார்கிட்டயாவது கத்துக்கிட்டா தாண்டி தப்பு
அவன் சொல்லிக்கொடுத்தா தப்பில்லை
அதுக மனசுல கள்ளம் இல்லை……… நீயே தப்பு தப்பா சொல்லி கொடுக்காதே”
.(அதுகளுக்கு ஒன்னும் புரியல னா கூட இவளே எல்லாம் சொல்லிக் கொடுத்திருவா போல)
“போங்கடா பசங்களா போய் விளையாடிட்டு வாங்க”
“”நீ வா நெறய வேலை இருக்கு” என பாட்டி செல்ல,
சொன்னதுதான் தாமதம்
ரெண்டு பேரும் சிட்டா பறந்துஓடிட்டாங்க,
“ரொம்ப பயந்துட்டேன் மாமா என்னை அத்தை விடமாட்டாங்க னு நெனச்சேன்,”
“ம்ம்ம்” யோசித்தபடியே,
“. சித்திக்கு உன்னை பிடிக்காது பாப்பு,”

” அதனாலேயே அம்மாகிட்ட உன்ன பத்தி தப்பு தப்பா சொல்லித்தரத பார்த்திருக்கேன் நீ சித்தி கிட்ட எப்பவுமே ஜாக்கிரதையா இரு
புரியுதா?”

” சரி மாமா”
“எல்லாத்துக்கும் சரின்னு மட்டும் சொல்லு, ஆனா எதையும் புரிஞ்சுக்காம சின்ன குழந்தையா வே இரு அப்புறம் எல்லாரும் உன்னை திட்டாம என்ன பண்ணுவாங்க புரிஞ்சு நடந்துக்கோ பாப்பு”
“சரி மாமா ட்ரை பண்றேன்”

தண்ணீர் தொட்டியை பார்த்த உடன்
ஹையா! எவ்வளோ பெரிய தொட்டி!
” சூப்பரா இருக்கு மாமா” என்றவாறே நீரில் இறங்க
இருவரும் விளையாட ஆரம்பித்துவிட்டனர் நீச்சலை மறந்து!

“நீ ரொம்ப அழகா இருக்க பாப்பு”
” போ மாமா பொய் சொல்லாத”
” தலையெல்லாம் கலைந்து அழுக்குத் துணி போட்டு இருக்கேன்’ அதுவும் தண்ணில நனைந்து இருக்கு’ இப்ப போய் அழகா இருக்கேன்னு சொல்ற !!!!!! லூசா நீ ?”

“இல்லடி இப்பதான் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க!”

” கொஞ்சம் வருஷம் கழிச்சு இதே இடத்துல வச்சு உன் கிட்ட இப்ப சொன்னதையே சொல்றேன்
அப்ப நீ என்ன பதில் சொல்றேன்னு பார்க்கலாம் சரியா? ம் ம்”

“.பாப்போம்..பாப்போம் “என்று புரியாமலேயே அவள் தலை ஆட்ட,

“அநியாயத்துக்கு அழகா இருக்கேடி” என ஹஸ்கி வாய்ஸில் தன்னை மறந்து அவள் அழகில் அவன் இலயித்து கொண்டிருக்க,

“பாப்பு”.

“என்ன மாமா?”

” இனிமேல் நானே உனக்கு நீச்சல் சொல்லி தரேன் னு கூப்பிட்டா கூட நீ வராதே.. அது இரண்டு பேருக்குமே நல்லது இல்ல”

” ஏன் மாமா இப்படி சொல்றீங்க?”
“அப்புறம் எப்படி நான் நீச்சல் கத்துகிறது? வேற யாரு சொல்லி தருவா?”என கோபமும் ஆற்றாமையுமாக அவள் கேட்க,

” நானே சொல்லி தரேன் ஆனா இப்ப இல்ல சரியா?”

“வேற யார்கிட்டயும் கேட்காதே புரியுதா?”

” சரி.. ம் .ம்”
“. ஆனா இப்ப எல்லாம் இப்படித்தான் மாத்தி மாத்தி பேசுற உன் பேச்சு கா என்கூட பேசாத”என்று வெகுளியாக தன் பிடித்தம் இன்மையை வெளிப்படுத்த

“இங்கே வா, நான் சொல்றதை கொஞ்சம் கேளு”,

“நீ ரொம்ப சின்ன பொண்ணு டி ”
“எனக்கு உன் மேல கொள்ளை ஆசை.”
” எங்க எனக்கே தெரியாம உன்ன காயப்படுத்தி விடுவேனோ னு பயமா இருக்குடி”
“அதனாலதான் சொல்றேன் புரியுதா.?”
“ம் ஹு ம்”
” ஒன்னும் புரியல! ”
“வேணா ஒண்ணு பண்றேன்”
” நீ என்ன சொல்றியோ அப்படியே கேட்டுக்குறேன் மாமா!” என கூறி அவன் முகத்தைப் பார்க்க,

அவளுக்கு தெரியல,,இதைவிட சிறந்த பதில் யாராலும் சொல்ல முடியாது என்று.இதைவிட ஒரு ஆம்பளைய பெருமைப்படுத்த யாராலயும் முடியாது,

ஒருத்தன முழுசா நம்பி ஏற்காமல் இந்த மாதிரி பதில் சொல்ல முடியாது. அத இவ ரொம்ப எளிமையா செஞ்சு அவனோட மனசுல காதல ஆழமா பதிச்சுட்டா!

” இந்த ஒரு வார்த்தை போதும் டி”
” காலம் முழுக்க உன்ன என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன் ”
உணர்ச்சிப் பிழம்பாய்,
இவன் தன் காதலை கண்ணில் தேக்கி
“என்ன அவ்ளோ நம்புறியா பாப்பு”
“நான் நம்பாமல் வேற யார் நம்புறது மாமா?” என புருவத்தை உயர்த்தி கேட்க,
இவள் புரிந்து சொன்னாளோ, இல்லை புரியாமல் சொன்னாளோ ,
ஆனால் இந்த காதலும் உண்மை இவள் நம்பிக்கையும் உண்மை அதை
அவன் உணர்வதும் உண்மை.
அதீத காதலினால் நரம்புகள் விடைக்க..
உடலும் மனமும் அவள் அண்மைக்கு ஏங்க,
பாப்பு வின் முகத்தை கையில் ஏந்தி நெருங்கி வந்து,
அவள் இடுப்பை வளைத்து தன்னோடு இணை சேர்த்து,
கண்ணோடு கண் நோக்கி
அவள் உயிரோடு இவன் உணர்வு கலந்து ,
அவள் கண்ணில் இவனைப் பார்க்க,
உதட்டோடு உதடு பொருந்த வரும்-பொழுது,
திடீரென,

அந்த முகம் மாறி ஆதியின் முகம் வந்தது,
. பதறிக்கொண்டு கனவிலிருந்து விழித்து எழுந்தாள்

கடவுளே!
ஏன் என்னை இப்படி கொல்ற?
இனி சோதனை தான் என் வாழ்க்கையா என தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவள் செல் அழைத்தது .. திரையில்

கனவின் நாயகனே காலிங்..
ஆதித்யன்.
அடி என் மவுனத்தாரகையே

அடி என் மவுனத்தாரகையே

மௌனம் 2

கைபேசியை வெறித்து பார்த்தவள் மனதில் ,
முதல் நாள் அலுவலகத்தில் நடந்த அனைத்தும் கண்முன்னே படமாய் விரிந்தது,
அனைவரையும் போல் எம். டி எதற்கு கூப்பிட்டார் என்று அறிந்துகொள்ள வந்த மதுவிற்கு ஆதி யை அங்கு பார்த்தவுடன் பேரதிர்ச்சி! அதுவும் ஆனந்த அதிர்ச்சி
அந்த முகம் ,
அந்த கண்கள்,
புருவத்தின் மேலே உள்ள சிறு கருவண்டு மச்சம் ,
அவன் காதுக்கு அருகிலுள்ள தழும்பு ,
என அனைத்தும் பார்த்தவள்
இவன் தன் உயிரானவன் என அவளுக்கு உணர்த்தியது!
உணர்ந்த நிமிடம் அவள் அவளாக இல்லை,
கடவுளை பக்தன் நேரில் பார்த்தால் எப்படி உணர்வான், அது போன்றதொரு உன்னதமான அனுபவம்!ஒரு மாபெரும் உணர்வு பேரலை தாக்கியது போல!
இதுவரை எந்த ஆண்மகனைப் பார்த்தும் வராத ஓர்உணர்வு,
இதயக் கூடு துடிக்கும் சத்தம் அருகில் உள்ளவர்களுக்கு கூட கேட்டிருக்கும் அப்படி ஓர் துடிப்பு,
தன் உயிராக,
உணர்வாக,
சுக துக்கமாக,
அனைத்துமாய் ஆனவன்,
ஒரு முறையாவது அவன் முகத்தை பார்க்க மாட்டோமா என ஏங்கித் தவிக்கும் மனம்,
என பல வருடங்களாய் மனதில் அவனுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவளுக்கு
திடீரென நேரிலேயே அவள் கண்முன்னே வந்து நின்றால்!!
அதுவும் எதிர்பார்க்காத இடத்தில் ,எதிர் பர்க்கா வேளையில்,
என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு மேலே எழும்ப,
உடல் தன் இயக்கத்தை மறந்து
மனம் தன் செயலை மறந்து
என்ன செய்வது என்று புரியாத உணர்வு!
உடலின் செல்கள் அனைத்தும் திடீரென்று புதுப்பித்தது போன்ற ஒரு உற்சாகம்
மூளை
புரியாமல் வேலைநிறுத்தம் செய்துவிட
இவள் ஆச்சரியத்தில் ஆனந்தத்தில் ஸ்தம்பித்து போய் நிற்க!
பலவித எண்ணக் கலவைகளின் பிரதிபலிப்பாக அவள் முகம் இருக்க!
அவனோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதுபோல அவளை பார்த்து வைக்க,
வந்ததே இவளுக்கு கோபம்!
இவ்வளவு நாளா நான் எங்க இருக்கேன்னு கூட உனக்கு தெரியல,
என்னை தேடி வரல,
இப்போ யாரோ மாதிரி பாக்குறியா என கோபம் கொப்பளிக்க அவனை பார்க்க
சரியாக அதே நேரம் தான் ஆதி அவளைப் பார்த்தது!
ஒரு நிமிடம் அவன் கண்கள் சுருங்கி விரிய 10 நிமிட அவசர மீட்டிங்கை முடித்துவிட்டு சொன்னான் மிஸ் மதுமதி என் கேபின் க்குக் வாங்க!
மது எனும்சிலைக்கு சிறிது சிறிதாக நடக்கும் நிகழ்வு புரியவர நிற்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்த நிலையில்
மாமா நீயா?கடவுளே என் பிரார்த்தனை பலன் அளித்து விட்டதா?
என உள்ளம் உவகையில் துள்ளி குதிக்க
அதுவரை சிலையாய் இருந்தவள் கண்களில் கண்ணீர்! அதுவும் ஆனந்த கண்ணீர்!

வர சொன்னானே,எப்படி பேசுவான்? எப்படி நடந்து கொள்வான்?கட்டி பிடிப்பானா?
முத்தம் கொடுப்பானா?ஆணழகனாக இருக்கிறானே! என்னை பிடிக்குமா?
இன்னைக்கு பார்த்து இப்படி பக்கி மாதிரிவந்திருக்கேன்,என்னை பிடிக்குமா?
என சிந்திக்க ஆரம்பித்து விட்டாள். கூடவே வெட்கமும் சிரிப்பும் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டு விட, அந்த இடத்தை விட்டு சிறு அடி கூட எடுத்து வைக்க இயலாமல் தன்னுள்ளேயே உழன்று கொண்டிருக்க,
“மேடம் மேடம்”
என அலுவலக துப்புரவாளர் அழைக்க,
சூழ்நிலை உணர்ந்து எழுந்தவள்
” ஹால் சுத்தம் பண்ணணும் மேடம்” என்று கூற
” சாரி”என்ற ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டு
பலவித எதிர்பார்ப்புகளோடு தன்னவனைக் காண சென்றாள்,
அனுமதி கேட்டதும், வரலாம்என்ற அழுத்தமான பதிலின் பின் கண்கள் மின்ன உள்ளே சென்ற மது பார்த்தது கடமை கண்ணாயிரத்தை!
அடப்பாவி மாமா ஆசை யா பார்ப்ப னு வந்தா
கம்ப்யூட்டர வெறிச்சு பாத்துட்டு இருக்கியே இது நியாயமா ? என மனதில் நினைக்கும்போதே
மிஸ் மதுமதி உனக்கு எதாவது பிரச்சனையா? என ஒருமையில் அவன் கேட்க
மலங்க விழித்தபடி மது
“‘ சார் புரியல”
“எதுக்கு என்ன பார்த்து அப்படி முறைச்ச?”
மதுவோ புரியாமல் விழிதபடி நிற்க
“எல்லாரும் என்னை ஆச்சரியமா பாக்க, நீமட்டும்என்னை வேற விதமா பார்த்த
எனக்கு அது சுத்தமா பிடிக்கல.என்கிட்ட இந்த மாதிரி வேலையெல்லாம் வெச்சுகாதே.இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்புரியுதா?”
“இங்கபார் இந்த கம்பெனி இல் இஷ்டம் இருந்தால் வேலை பார் இல்லையா வேலைய விட்டு போயிட்டே இரு. அதை விட்டுட்டு இப்படி பார்ப்பது எல்லாம் என்கிட்ட வேணாம் புரியுதா?”.
“உனக்கு இது முதலும் கடைசியுமான எச்சரிக்கை நீ போகலாம்.”என்றவுடன்
எழுந்து வெளியே வந்தவள் மனதில் வெறுமையை தவிர எதுவுமில்லை !

உயிர் பிரியும் வலியை மனதில் அனுபவித்தவள் தன் இருப்பிடத்திற்கு எப்படி வந்தாள் என்றே தெரியாது, கண்கள் குளமாக, வாஷ் ரூமிற்குச் சென்று முகத்தை கழுவியும்தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் போக சத்தமின்றி ஒரு மூச்சு அழுதவள்,
மனதின் வலியை யாரிடமும் பகிர்ந்து பழக்கமில்லாதவள்,தன்னை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.ஒருவழியாக தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் முகம் கழுவி தன் இருக்கைக்கு வந்தவள்,வேலையிலும் கவனம் இல்லை , எப்பொழுது வீட்டிற்குப் போவோம் என்று தோன்றியதால் தலைவலி பொறுக்க முடியவில்லை என கூறி விரைவிலேயே வீட்டுக்கு வந்து விட்டாள்.
**********
விடிந்ததும் முதல் வேலையாக அன்று தான் அலுவலகத்திற்கு வர இயலாது என்று மெயில் அனுப்பியவள்
ஆதியை பற்றிய சிந்தனையிலேயே இருந்தபோதுதான் அவன் அழைத்திருந்தான்!
அவ்வளவு நேரம் தூங்கியதாலோ என்னவோ மனம் சற்று லேசாக இருந்தது
யோசிக்க ஆரம்பித்தாள்
இது என் வாழ்க்கை நானேதான் செதுக்கிக் கொள்ள முடியும் உறவுகளையும் நம்ப முடியாது. முதல் எதிரியே அவர்கள்தான்,மூன்றாம் நபரை உள்ளே நுழைத்தால் பிரச்சனைகள் வலுக்கத்தான் ஆரம்பிக்கும்,என்ற எண்ணம் தோன்ற
எதற்காக இப்படி பேசினான்? ஒருவேளை அவனுக்கு என்னைத் தெரியவில்லையோ?
அதனால் தான் அப்படிப் பேசினானா? என்ற எண்ணம்-வலுக்க,
எனக்கு அவன தெரிஞ்ச மாதிரி அவனுக்கும் என்ன தெரிஞ்சுருக்கணும்னு கட்டாயம் ஒன்னும்இல்லையே, என சிந்தித்தவள்
பரவால்ல மாமா நான் யாருன்னு தெரிய வைக்கிறேன் உனக்கு,அது வரைக்கும் உன் பாடு திண்டாட்டம் தான் மாமா! இதுவரைக்கும் நான் யாரு கூடயும் கண்ணாமூச்சி விளையாண்டது இல்லை, இனிமேல் உன்கூட விளையாடப் போறேன் நீ மண்டைய பிச்சிக்கிற போற நான் அத வேடிக்கை பாக்க போறேன்.
இனிமேல் எதுனாலும் நாட்டாமை டு பங்காளி -பங்காளி டு நாட்டாமை தான்
மாமா நான் ஒரு முடிவு பண்ணிட்டேனா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டவள்இனி உன் பாடு திண்டாட்டம்தான் என நினைத்தவள், உடனேயே அழைத்தாள் தன்னவனை,

“ஹலோ சார்”
” அறிவு இருக்கா?”
என்னது?
“உனக்கு அறிவு இருக்கான்னு கேட்டேன்”
எந்த முகாந்திரமும் இல்லாது எடுத்தவுடனேயே உனக்கு அறிவு இருக்கா ன்னு கேட்டா இவனை எல்லாம் என்ன செய் ய லாம்.இரு மாமு இப்போதான் உனக்கு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணிட்டு இருக்கேன்.
” லீவு என்று ஃபோன் பண்ணி கூட சொல்ல முடியாதா ?”
சொன்னா மகாராஜா லீவ் கொடுத்துவிட்டுத் தான் தான் அடுத்த வேலை பார்ப்பீங்க
“நான் mail அனுப்பி இருக்கேன் சார்”
“ஒரு எம்டி என்கிற மரியாதை இருக்கா உனக்கு?”உன் மரியாதையை கொண்டு போய் குப்பையில் போடு
“நீங்க என்ன அர்த்தத்துல சொல்றீங்கன்னு புரியலை sir”
” இது உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்”
உணக்கும்தான் டா, வளந்தவனே!
” இனிமேல் எதுவா இருந்தாலும் என்கிட்ட டைரக்டா ரிப்போர்ட் பண்ணனும்”
சுச் சா போன கூடவா?
“ஓகே சார்”
” நான் லீவு என்றால்கூட”
உன் சீட்டு கிட்ட போய் ரிப்போட் குடுக்கணுமா? இல்ல உன் வீட்டு வாசலில் வந்து நின்னு ஐயா சாமி இந்த அங்க ரிப்போர்ட் னு கொடுக்கணுமா?
” உனக்கு லீவு வேணும்னா இனிமேல் நீ என் கிட்ட போன் பண்ணி கேட்டுட்டு தான் லீவு எடுக்கணும் புரியுதா”?
ஏன் புரியாம, காது இன்னும் நல்லா கேக்குதே
” உன் வேலையோட பொறுப்பு உனக்கு தெரியுமா?”
பொறுப்பு பத்தி சொல்ற மூஞ்சிய பாரு
” இவ்வளவு கவனக் குறைவா இருப்பன்னுநினைக்கல”
நானும் தான் நீ இப்படி இருப்பேன்னு நினைக்கலை
” நீ பாத்துட்டு இருக்குற ப்ராஜெக்ட் எம்-எம் கம்பெனி உடையது”
பார்ரா இத்தனை நாளா எனக்கு இது கூட தெரியலையே
” இன்னிக்கு ஃபைனல் ஸ்கெட்ச் பாக்க அவங்க வந்து இருந்தாங்க”
வந்துட்டு போறாங்க
“இன்னும் நாலு நாள்ல ப்ராஜெக்ட் அவங்க கிட்ட நாம டெலிவர் பண்ணி ஆகணும்”
இப்போ அந்த விளக்கெண்ணெய்க்கு என்ன?
“எந்த முன் அறிவிப்பும் இல்லாம நீ பாட்டுக்கு லீவு எடுத்துட்டு போயிட்ட”நீ கொஞ்சுன கொஞ்சலுக்கு காலையிலேயே வந்து பல்ல கட்டிருக்கணுமோ?
” இங்க பதில் சொல்றது யாரு?”
நீ தான்
” இதுக்குதான் நான் இங்கே உட்கார்ந்து இருக்கேன் னு நினைச்சியா?”
வேற எதுக்கு?
” நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது ”
நான் என்ன பண்ண போறேன் னு எனக்கே தெரியாது மாமு!
“இந்த பிராப்ளம் ஐ சரி பண்ணு”
இங்க வாழ்க்கையே ப்ராப்ளம் ஆ இருக்கு அத எப்படி சரி பண்றதுன்னு தெரியலை உனக்கு இந்த பிஸ்கோத்து மேட்டர் முக்கியமாக போச்சு
” அவங்க கிட்ட பேசி நாளைக்கு மீட்டிங் கன்ஃபார்ம் பண்ணு”.என்ன மீட்டிங்?என வடிவேலு ஸ்டைலில்
“உன்னோட தகுதியை நாளைக்கு நான் பாக்குறேன்”
எந்த தகுதியை?
” நாளைக்கு பிராஜக்ட் ஃபுல் பிக்சர் எல்லாரும் பாக்கணும் அவ்வளவு தான்”
எல்லருமா?
“என்ன பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் ”
உன் மேல கொல வெறி ல இருக்கேன்னு அர்த்தம்
“ஓகே சார்”
“இப்போவே பேசிட்டு எனக்கு ரிப்போர்ட் அனுப்பு பை”.(பையோ பை)
பேசி முடித்தவுடன் ஆள்காட்டி விரலால் காதினை குடைந்த படி அப்பா!
ஒரு லட்சம் சரம் வெடிச்சு ஓய்ந்த எஃபெக்ட் டா சாமி,இவனுக்கெல்லாம் தன்மையா பேசவே வராதா,என்ன விஷயம் னு சொல்றதுக்கு கூடவா இப்படி எண்ணெயில் போட்டு கடுகு மாதிரி பொறி யு வாங்க,இரு இரு மாப்பு உனக்கு வெக்க வேண்டிய இடத்தில் வெக்கரேன் ஆப்பு! (ஐயையோ தப்பா புரிஞ்சிக்க கூடாது நான் பச்ச புள்ள!)
என நினைத்த படி, எம்- எம் கம்பெனியின் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் திரு வினோத் பாண்டே விற்கு அழைத்தாள் ,
” ஹலோ மிஸ்டர் வினோத்”என்றவள், தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களது ப்ராஜெக்ட் முடிந்துவிட்டது எனவும் மறுநாள் வந்தாள் முழு வடிவத்தையும் காணலாம் எனவும் கூறி அவர்களை மறுநாள் அழைத்ததுடன் சந்திக்கும் நேரத்தையும் முடிவு செய்துவிட்டு நன்றி கூறி வைத்தவள்,
ஆதித்தனுக்கு எப்படி தகவல் தரலாம் என யோசித்து வாட்ஸ் அப் பண்ண முடிவு செய்து,
தகவலை அனுப்பிவிட்டு அவன் அழைப்பிற்காக காத்திருக்க,
அங்கு ஆதியின் முகமோ
கோவைப்பழம் போல கோபத்தில் சிவந்து துடித்துக்கொண்டிருந்தது! .
அறிவு கெட்டவ மெசேஜ்அனுப்பி இருக்கா பாரு லூசு, லூசு,இப்போ நான் என்ன பண்ணுவேன் ஒரு மண்ணும் புரியல,இந்த லூசு ரிபோட் அனுப்பியாச்சு,இத படிக்காம நான் அவகிட்ட கேள்வியும் கேக்க முடியாது ,எனநறநற வென பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான், ஏனெனில் ,
இவள் அனுப்பியது தூய தமிழில் !
அவனுக்கு தமிழ் சரியா படிக்க வராது! அதுவும் தூய தமிழில் என்றால்?
பள்ளியில் ஃப்ரெஞ்ச் இரண்டாவது மொழி யாக தேர்ந்தெடுத்து படித்தவன் கல்லூரி மற்றும் வர்த்தக மேலாண்மை படித்தது அனைத்தும் ஆஸ்திரேலியாவில்.
எனவே தமிழுக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம்.
மது அனுப்பிய செய்தி,
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் ம. ம. வர்த்தக நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதில்,
அவர்கள் மனம் கனிந்து முன்னரே தகவல் சொல்லாமல் வந்தமைக்காக மன்னிப்பு கோரி ,வருத்தம் தெரிவித்து, தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்தமைக்காக மீண்டும் மன்னிப்பு கோரி, நாளைக் காலை தங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும்மீண்டும் வருகை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை,
மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதல் உள்ள அலுவலி(அலுவலர் எதிர்ப்பதம்)
மதுமதி

ஒரு வழியாக கூகிள் ஆண்டவரை சரணடைந்து மொழிப்பெயர்ப்பு செய்து புரிந்து கொண்ட பிறகு ஆசு வாசப்பட்டவன், மணியை பார்க்க அது இரவு பதினொன்று முப்பது எனக் காட்டியது, நொந்தே போய்விட்டான் ஆதி!
இந்த லூச இப்படியே விட்டா எப்படி?இப்போ திட்டுற திட்டில் இனிமே எல்லா வகையிலும் மிகச் சரியாக இருக்கனும் என்று நினைத்தவன்
கொஞ்சம் கூட யோசிக்காமல் அழைக்க,

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது

என்ற பாடல் ரிங் டோன் ஆக ஒலிக்க,
அவன் மனதுள் சொல்லவொண்ணா எண்ணங்கள் ஏதேதோ வந்து போக ,
வைத்து விடலாம் என நினைக்கையில் அந்தப் பக்கம் மது
“ஹலோ சார் ”
“ஹலோ லைன்ல தான் இருக்கீங்களா சார்” என கத்திக்கொண்டு இருப்பது கேட்க
” உன்னோட மெசேஜ் படிச்சு பார்த்தேன்”
” நாளைக்கு ஆபீஸ்ல சந்திக்கலாம் பை” என வைத்துவிட
என்னடா இது சிங்கம் சிம்பிளா தலைவாரி விட்டு போகுதே பின்னாடி ஏதாவது பெருசா ப்ளான் பண்ணி இருக்குமோ என நினைத்தவள்
எதுவானாலும் நாளைக்கு தெரியப்போகுது அதுக்குள்ள எதுக்கு மண்டை உடைச்சிங்! என்று நினைத்தவாறு உறங்க சென்றுவிட்டாள் .
மறுநாள் அலுவலகத்தில்
அனைத்து வகையிலும் எம்எம் கம்பெனிக்கு இவர்கள் செய்த ப்ராஜெக்ட் பிடித்து விட மிக நேர்த்தியாக செய்தமைக்காக மது வை பாராட்டியதோடு ஆதி இடமும் மதுவைப் பற்றி பாராட்டிவிட்டு சென்றனர். அவன் கண்களில் ஒரு நிமிடம் பாராட்டு தெரிந்தது போல் இருக்க மீண்டும் அதே கழுகுப்பார்வை,உள்ளூர சற்று எரிச்சல் பட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாது இருக்க,அவர்கள் செல்லும் வரை பொறுமையாக இருந்து ஆதி மதுவிடம் உன்னுடன் பேசவேண்டும் என்றான் ,
“நீ எனக்கு அனுப்பிய தகவல் தூய தமிழில் இருந்தது, எனக்கு தமிழ் தெரியும் என்று உனக்கு எப்படி தெரியும்?”
“அச்சச்சோ சார் நான் ஆங்கிலத்தில் தான் அனுப்பினேன் இப்படி உங்களுக்கு தமிழ்ல வந்ததுன்னு தெரியலை சார்”
“அது என்ன நம்ப சொல்றியா”?
” அடிப்படையாக நான் ஒரு தமிழ் பொண்ணு சார் என்னுடைய நண்பர்கள் கிட்ட நான் தமிழ்ல தான் சாட் பண்ணுவேன் சார் ஒருவேளை தெரியாம உங்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் வந்து விட்டதோ என்னவோ மன்னித்துக் கொள்ளுங்கள் சார் “என மிக பவ்யமாக கேட்க
வேண்டுமென்றே அனுப்பிவிட்டு இப்பொழுது ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறா பாரு என எரிச்சலுடன் அவளைப் பார்த்தவன்
“இந்த பதில்ல உண்மை இல்லை”
“எங்க மாமா சத்தியமா சொல்றேன் சார் நான் பொய் சொல்லல சார்” என்றதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் “போய் வேலையை பாருங்க இனிமேல் இதுபோல கவனக்குறைவாக இருக்காதீங்க”
என்றவன் தன் வேலையை பார்க்க திரும்ப
” ஒரு நிமிஷம் சார்”
” உங்களுக்கு தமிழ் தெரியுமா சார் ? ” என்று கேட்க
அவளைப் பார்த்தவன் பார்வையில் என்ன இருந்தது என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை
“இப்ப ரொம்ப முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமா மதுமதி?”
“அது இல்ல சார் இந்த ஆபீஸ்ல தமிழ் பேசுறவங்க மொத்தம் மூணு பேர்தான் உங்களுக்கு தமிழ் தெரிஞ்சா உங்க கிட்ட தமிழ்ல பேசலாம் அதுதான் சார் கேட்டேன்”என்று விடாகண்டியாகக் கேட்க, அவளை முறைத்தவனை லட்சியம் செய்யாது
” எங்க ஊரு கோயம்புத்தூர் பக்கம் மருதமலை சார், நீங்க எந்த ஊரு சார்? ” என்றதும் கோபமாக ஆதி
“ஆபீஸில் ஆயிரத்தெட்டு வேலை இருக்கு அத போய் பாருங்க என்ன பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாதீங்க! இதுக்குதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கரங்களா? ” என கர்ஜிக்க, மது தன் இடத்தை காலி பண்ணியதும் உப்.. என்று மூச்சை வெளியிட்டவன் இவ கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் இல்லன்னா ரொம்ப கஷ்டம் என நினைத்தவாறு தன் கணினியை உயிர்ப்பிக்க அது பாஸ்வேர்டு கேட்டது பாஸ்வேர்டை போட்டவுடன் கணினி தன் செயலை இழந்துவிட்டதுகடவுளே என்ன இது ?யாரோ என்னோட கணினியை ஹேக் பண்ணியிருக்காங்க!
டேம் இட்!என்ன தைரியம்! யார் இப்படி பண்ணியது? ஹூ இஸ் தட் பிளாக் ஷீப்?
என ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தான் ஆதித்யா!
அவன் கத்தியது அவன் கேபின் தாண்டி வெளியே கேட்டது
இங்கு மதுவோ மிகக் கூலாக தன் வேலையில் கவனமாக இருப்பது போல் தனது டேபிளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள் முகத்தில் மட்டும் குறுஞ்சிரிப்பு!

அடி என் மவுனத் தாரகையே

மௌனம் 2

செல்லையே வெறித்து பார்த்த மதுவின் மனதில் ..

முதல் நாள் அலுவலகத்தில் நடந்த அனைத்தும் கண்முன்னே காட்சியா விரிந்தது,

அனைவரையும் போல் M.D எதற்கு கூப்பிட்டார் என்று வந்த மதுவிற்கு ஆதி யை அங்கு பார்த்தவுடன் பேரதிர்ச்சி !!!

அதுவும் ஆனந்த அதிர்ச்சி
அதே முகம் .. அதே கண்கள்..
புருவத்தின் மேலே உள்ள சிறு ஸ்டார் மச்சம், காதுக்கு அருகிலுள்ள தழும்பு ,
என அனைத்திலும் அடையாளம் கண்டவள்..

தன் உயிரானவன் என அவளுக்கு உணர்ந்துகொண்டாள்
அடுத்த நிமிடம் அவள் அவளாக இல்லை. கடவுளை பக்தன் நேரில் பார்த்தால் எப்படி உணர்வானோ.. அது போன்றதொரு உன்னதமான பரவச அனுபவம்!

ஒரு மாபெரும் உணர்வு பேரலை தாக்கியது போல!

இதுவரை எந்த ஆண்மகனைப் பார்த்தும் வராத ஓர் உணர்வு,
இதயக்கூடு துடிக்கும் சத்தம் அருகில் உள்ளவர்களுக்கு கூட கேட்டிருக்கும் அப்படி ஓர் துடிப்பு,
தன் உயிராக, உணர்வாக,
சுக துக்கமாக, அனைத்துமானவன் இதோ எதிரில்..

ஒரு முறையாவது அவன் முகத்தை பார்க்க மாட்டோமா என ஏங்கித் தவித்த மனம் குளிர்ந்தது

பல வருடங்களாய் மனதில் அவனுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவளுக்கு
திடீரென நேரிலேயே அவள் கண்முன்னே வந்து நின்றால்!!
அதுவும் எதிர்பார்க்காத இடத்தில் வேளையில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு
உடல் தன் இயக்கத்தை மறந்து
மனம் தன் செயலை மறந்து

என்ன செய்வது என்று புரியாத உணர்வு!

உடலின் செல்கள் அனைத்தும் திடீரென்று புதுப்பித்தது போன்ற ஒரு உற்சாகம் மூளை
புரியாமல் வேலைநிறுத்தம் செய்துவிட .. இவள் ஆச்சரியத்தில் ஆனந்தத்தில் ஸ்தம்பித்து போய் நிற்க!
பலவித எண்ணக் கலவைகளின் பிரதிபலிப்பாக அவள் முகம் இருக்க..

அவனோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதுபோல அவளை பார்த்து வைக்க, வந்ததே இவளுக்கு கோபம்.

இவ்வளவு நாளா நான் எங்க இருக்கேன்னு கூட உனக்கு தெரியல.. என்னை தேடி வரல,’
இப்போ யாரோ மாதிரி பாக்ககிரியா? என கோபம் கொப்பளிக்க.. அவனை பார்க்க

சரியாக அதே நேரம் தான் ஆதி அவளைப் பார்த்தது.. ஒரு நிமிடம் அவன் கண்கள் சுருங்கி விரிய
10 நிமிட அவசர மீட்டிங்கை முடித்துவிட்டு சொன்னான்..

மிஸ் மதுமதி என் கேபின்க்கு வாங்க என்று..

மது எனும் சிலைக்கு சிறிது சிறிதாக நடக்கும் நிகழ்வு புரியவர, நிற்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்த நிலையில் மாமா நீயா?
கடவுளே என் பிரார்த்தனை பலன் அளித்து விட்டதா?
என் மாமாவ பார்த்துட்டேன்
எஸ் எஸ் எஸ் என உள்ளம் துள்ளி குதிக்க..

கண்களில் கண்ணீர்!
அதுவும் ஆனந்த கண்ணீர்.

வர சொன்னானே?
எப்படி பேசுவான்?
எப்படி நடந்து கொள்வான்?’
கட்டி பிடிப்பானா?’
முத்தம் கொடுப்பானா?’
ஆணழகனாக இருக்கிறானே என்னை பிடிக்குமா?’
இன்னைக்கு பார்த்து இப்படி பக்கி மாதிரி வந்திருக்கேன் .. என்னை பிடிக்குமா?’
என சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.

கூடவே வெட்கமும் சிரிப்பும் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டு விட, அந்த இடத்தை விட்டு சிறு அடி கூட எடுத்து வைக்க இயலாமல் தன்னுள்ளேயே உழன்று கொண்டிருக்க,

“மேடம் மேடம்” என அலுவலக துப்புரவாளர் அழைக்க,

சூழ்நிலை உணர்ந்து எழுந்தவள்

” ஹால் க்ளீன் பண்ணணும் மேடம்” என்று கூற

” சாரி”என்ற ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டு

நேரே சென்றது ஆதியை காண,
பலவித எதிர்பார்ப்புகளோடு, அவள் அறைக் கதவைத் தட்ட,
யெஸ்.. என்ற அழுத்தமான பதிலின் பின் கண்கள் மின்ன உள்ளே சென்ற மது பார்த்தது
கடமை கண்ணாயிரத்தை..

அடப்பாவி மாமா ஆசை யா பார்ப்பனு வந்தா
கம்ப்யூட்டர வெறிச்சு பாத்துட்டு இருக்கியே இது நியாயமா? என மனதில் நினைக்கும்போதே..

“மிஸ் மதுமதி உனக்கு எதாவது பிரச்சனையா?”என ஒருமையில் அவன் கேட்க, விழித்தபடி மது

“‘ புரியல”

“எதுக்கு என்ன பார்த்து அப்படி முறைச்ச?”

மரமாய் மது நிற்க..

“எல்லாரும் என்னை ஆச்சரியமா பாக்க, நீமட்டும்
என்னை வேற விதமா பார்த்த
எனக்கு அது சுத்தமா பிடிக் கல.
என்கிட்ட இந்த மாதிரி வேலையெல்லாம் வெச்சுகாதே.
இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்புரியுதா?” இந்த கம்பெனி ல இஷ்டம் இருந்தால் வேலை பார் இல்ல நா வேலைய விட்டு போயிட்டே இரு.அதா விட்டுட்டு இப்படி லுக் விடறது எல்லாம் என்கிட்ட வேணாம் புரியுதா? உனக்கு இது முதலும் கடைசியுமான எச்சரிக்கை நீ போகலாம்.” என்று கழுவி கழுவி ஊற்ற.. ஒன்றையும் துடைக்காது அப்படியே
எழுந்து வெளியே வந்தவள் மனதில் வெறுமையை தவிர எதுவுமில்லை ..

அன்றொரு நாள் இதே இரவில் அவனிருந்தான் என் அருகில்…
நிறுத்து நிறுத்து மது..
நோ ஓல்ட் சாங் ட்ரை நியூடா.

ஓகே.. டா

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா ..
விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

நிறுத்துடா மது.. புது பாட்டு கேட்டதுக்கு வச்சு செஞ்சுட்டியேடா

பாத்திரத்தோடு ஒன்றிட்டேன் மாமா மாமா சாரி சாரி..

உன் மாமா பித்து கண்டு கதை படிக்கும் நாங்கள் கொல வெர்றி ஆகிட்டோம் ஜாக்கிரதை மது..

மாமா மேல சத்தியமா ஸ்டெடி மக்களே !!!

அடேய் .. திரும்பவும் மாமாவா?

ஹி ஹி ஹி விட்ருங்கோ ஓடிட்டேன்..

பாடி பாடி உயிர் பிரியும் வலியைமனதில் அனுபவித்தவள் தன் இடத்திற்கு எப்படி வந்தாள் என்றே தெரியாது கண்கள் குளமாக, வாஷ் ரூமிற்குச் சென்று முகத்தை கழுவியும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் போக சத்தமின்றி ஒரு மூச்சு அழுதாள்
இது பணியிடம் தனக்கு தானே சொல்லி சொல்லி தன்னை ஓர் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.
சந்தோஷங்களை வஞ்சனையின்றி பரிமாறுபவள்
வலியை யாரிடமும் பகிரமாட்டாள் எப்போதும் அதனாலேயே ஜீரணிப்பதற்கு திராணியில்லாமல் சோர்வு கொண்டாள்

ஒருவழியாக தன்னை ஆசுவாசப்படுத்தி ஓர் லைட் மேக்கப் பண்ணி தன் இருக்கைக்கு வந்தவள்.. வெளிவேஷம் போட்டாலும் உருப்படியா வேலையில் கவனம் இல்லை.

எப்பொழுது வீட்டுக்கு வீட்டிற்குப் போவோம் என்று தோன்றியதால் தலைவலி பொறுக்க முடியவில்லை என கூறி பெர்மிசன் எழுதிக்கொடுத்துட்டு விரைவிலேயே வீட்டுக்கு வந்து விட்டாள்.

பல எண்ணங்கள் மோதலால்
விடிய விடிய தூங்காமல் தன்னை வருத்திக் கொண்டு இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

**********
விடிந்ததும் முதல் வேலையாக அன்று தான் அலுவலகத்திற்கு வர இயலாது என்று மெயில் அனுப்பியவள்.. ஆதியை பற்றிய சிந்தனையிலேயே இருந்தபோதுதான் அவன் அழைத்திருந்தான்..

தூங்கியதாலோ என்னவோ மனம் சற்று லேசாக இருந்தது.. யோசிக்க ஆரம்பித்தாள்.

இது என் வாழ்க்கை நானேதான் செதுக்கிக் கொள்ள முடியும்
உறவுகளையும் நம்ப முடியாது
மூன்றாம் நபரை உள்ளே நுழைத்தால் பிரச்சனைகள் வலுக்கத்தான் ஆரம்பிக்கும் என்ற எண்ணம் தோன்ற…

எதற்காக இப்படி பேசினான்?

ஒருவேளை அவனுக்கு என்னைத் தெரியவில்லையோ?

எனக்கு அவன தெரிஞ்ச மாதிரி அவனுக்கும் என்ன தெரிஞ்சுருக்கணும்னு கட்டாயம் ஒன்னும் இல்லையே? என சிந்தித்தவள்

மாமாவுக்கு என்ன தெரியலனா என்ன? தெரிய வெச்சுட்டா? நினைத்தவள்

மாமா நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு நான் யாருன்னு உனக்கு தெரியலையா?

பரவால்ல மாமா தெரிய வைக்கிறேன் உனக்கு..

அது வரைக்கும் உன் பாடு திண்டாட்டம் தான் மாமா..
‘இதுவரைக்கும் நான் யாரு கூடயும் கண்ணாமூச்சி விளையாண்டது இல்லை இனிமேல் உன்கூட விளையாடப் போறேன் .. வா வா.

நீ மண்டைய பிச்சிக்கிற போற
நான் அத வேடிக்கை பாக்க போறேன் .. தலைக்கு மேலே வெள்ளம் போகுது இனி ஜான் என்ன முழம் என்ன?

இனிமேல் எதுனாலும் நாட்டாமை டு பங்காளி – பங்காளி டு நாட்டாமை தான்..

மாமா நான் ஒரு முடிவு பண்ணிட்டேனா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டவள்..

இனி உன் பாடு திண்டாட்டம்தான் மாமா மர்ம புன்னகைத்தவள்,

‘
எதுக்கு வெயிட் பண்ணனும் ஆக்சன் ஸ்டார்ட் நவ் மது .. தன்னையே சியர் அப் பண்ணி

ஆதியின் அழைப்பை எடுத்தாள்

“ஹலோ ஆதி சார் வணக்கம்”

” ஏதாவது சென்ஸ் இருக்கா? ”

“……….”

“உனக்கு அறிவு இருக்கான்னு கேட்டேன்”

#எந்த முகாந்திரமும் இல்லாது எடுத்தவுடனேயே உனக்கு அறிவு இருக்கா ன்னு கேட்டா இவனை எல்லாம் என்ன செய்யலாம். இரு மாமு இப்போதான் உனக்கு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணிட்டு இருக்கேன்#

” லீவு என்று போன் பண்ணி கூட சொல்ல முடியாதா ?”

#சொன்னா மகாராஜா லீவ் கொடுத்துவிட்டுத் தான் தான் அடுத்த வேலை பார்ப்பீங்க#

“நான் மெயில் அனுப்பி இருக்கேனே ஆதி சார்”

“ஒரு எம்டி என்கிற மரியாதை இருக்கா உனக்கு?”

#உன் மரியாதையை கொண்டு போய் குப்பையில் போடு#

“நீங்க என்ன அர்த்தத்துல சொல்றீங்கன்னு புரியல ஆதி சார்”

” இது உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்”

#உனக்கும்தான்டா வளந்தவனே#

” இனிமேல் எதுவா இருந்தாலும் என்கிட்ட டைரக்டா ரிப்போர்ட் பண்ணனும்”

#சுச்சா போன கூடவா?#

“ஓகே ஆதி சார்”

“நான் லீவு என்றால்கூட”

#உன் சீட்டு கிட்ட போய் ரிப்போட் குடுக்கணுமா? இல்ல உன் வீட்டு வாசலில் வந்து நின்னு ஐயா சாமி இந்தாங்க ரிப்போர்ட்னு கொடுக்கணுமா?#

” உனக்கு லீவு வேணும்னா இனிமேல் நீ என் கிட்ட போன் பண்ணி கேட்டுட்டு தான் லீவு எடுக்கணும் புரியுதா?”

#ஏன் புரியாம, காது இன்னும் நல்லா ஒர்க் ஆகுதே#

” உன் வேலையோட பொறுப்பு உனக்கு தெரியுமா?”

#பொறுப்பு பத்தி சொல்ற மூஞ்சிய பாரு#

” இவ்வளவு கவனக் குறைவா இருப்பீங்ன்னு நினைக்கல”

# நானும் தான் நீ இப்படி இருப்பேன்னு நினைக்கலை#

“நீ பாத்துட்டு இருக்குற ப்ராஜெக்ட் எம்-எம் கம்பெனியோடையது”

#பார்ரா இத்தனை நாளா எனக்கு இது கூட தெரியலையே#

“இன்னிக்கு ஃபைனல் ஸ்கெட்ச் பாக்க அவங்க வந்து இருந்தாங்க”

#வந்துட்டு போறாங்க நான் தடுக்கலியே#

“இன்னும் நாலு நாள்ல ப்ராஜெக்ட் அவங்க கிட்ட நாம டெலிவர் பண்ணி ஆகணும்”

#இப்போ அந்த விளக்கெண்ணெய்க்கு என்ன?#

“எந்த முன் அறிவிப்பும் இல்லாம நீ பாட்டுக்கு லீவு எடுத்துட்டு போயிட்ட”

#நீ கொஞ்சுன கொஞ்சலுக்கு காலையிலேயே வந்து பல்ல காட்டிருக்கணுமோ?#

“இங்க பதில் சொல்றது யாரு?”

#நீ தான்டா மாமா#

“இதுக்குதான் நான் இங்கே உட்கார்ந்து இருக்கேன்னு நினைச்சியா?”

#வேற எதுக்கு?#

” நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது ”

#நான் என்ன பண்ண போறேன் னு எனக்கே தெரியாது மாமு#

“இந்த பிராப்ளய சரி பண்ணு”

#இங்க வாழ்க்கையே ப்ராப்ளம் யா இருக்கு அத எப்படி சரி பண்றதுன்னு தெரியல உனக்கு இந்த பிஸ்கோத்து மேட்டர் முக்கியமாக போச்சு#

“ஒருவேளை இந்த ப்ராஜெக்ட் முடிக்காததனால தான் நீ சொல்லாமல் கொள்ளாமல் லீவு போட்டியோ?”

#நெனப்பு தண்டா உனக்கு#

” யாருக்கு தெரியும் ?”

#மொதல்ல உனக்கு எல்லாமே தெரியுமோ?#

“உன்னோட தகுதியை நாளைக்கு நான் பாக்குறேன்”

#எந்த தகுதியை?#

“அவங்க கிட்ட பேசி நாளைக்கு மீட்டிங் கன்ஃபார்ம் பண்ணு”

#என்னா மீட்டிங்?# என வடிவேலு ஸ்டைலில்..

“நாளைக்கு பிராஜக்ட் ஃபுல் பிக்சர் எல்லாரும் பாக்கணும் அவ்வளவு தான்”.

#எல்லாருமா?#

“இப்படி பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் ”

#உன் மேல கொல வெறி ல இருக்கேன்னு அர்த்தம்#

“ஓகே ஆதி சார்”

“டூ இட் நவ்.. பை”

.#பையோ பை#

‘ஒரு லட்சம் சரம் வெடிச்சு ஓய்ந்த எஃபெக்ட்டா சாமி

‘இவனுக்கெல்லாம் தன்மையா பேசவே வராதா
‘என்ன விஷயம் னு சொல்றதுக்கு கூடவா இப்படி எண்ணெயில் போட்டு கடுகு மாதிரி பொறி வாங்க’
‘இரு இரு மாப்பு உனக்கு வெக்க வேண்டிய இடத்தில் வெக்கரேன் ஆப்பு (ஐயையோ தப்பா புரிஞ்சிக்க கூடாது நான் பச்ச புள்ள!)
‘ஒரு வேளை இவன் அசைவ உணவு வகைல நண்டு அதிகமாக சாப்புடுவானோ?’
‘இப்படி தேள் மாதிரி கொட்டுரானே,’
‘இரு இரு இப்போ அவன் தேள் ஆ இல்ல நண்டா?
‘ஏய் உனக்கு இப்போ இது ரொம்ப முக்கியமான விஷயமாடி வாங்கின திட்டு கூட உன் மர மண்டைக்கு உரைக்கலியா’ என மனசாட்சி கூற
‘இன்னும் எவ்வளவோ பாக்க வேண்டி இருக்கு இதுக்கே பீல் ஆனா எப்படி என தூசு தட்டியவள்’

எம்- எம் கம்பெனியின் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் பாண்டேவிற்கு அழைத்தாள்..

” மதுமதி காலிங் ஃபிரம் மாஸ்டர் டெக் சொல்யூஷன்ஸ்”
” ஒஹ் ஹை”
” நான்தான் உங்களோட ப்ராஜெக்ட் ஹெட், உங்க ஜாப் ஆல்ரெடி முடிஞ்சிருச்சு டெஸ்டிங்க்ல இருக்கு நாளைக்கு நீங்க வந்தால் தாராளமா ட்ரையல் பார்க்கலாம் , நான் இன்னிக்கு அவுட் ஆப் ஸ்டேசன், சாரி பார் தி இன்கன்வெனியன்ஸ்” என தன்மையாக பேச..

“இட்ஸ் ஓகே மது. நாங்களும் இன்பார்ம் பண்ணிட்டு வந்துருக்கணும்.. நாளைக்கு நேரில் சந்திப்போம் பை. ”
என கூறி பிரச்சினையை சுமுகமா முடித்த பிறகு ஆதித்தனுக்கு எப்படி தகவல் தரலாம் என யோசித்து வாட்ஸ் அப் பண்ண முடிவு செய்து..

எது செஞ்சாலும் முறைப்படி செய்யணுமா மாமா?

இதோ பாருங்கள் சரவணன்.. கடமையே வடிவான சந்திரமுகியின் கடிதத்தை.. இனி குறை சொன்னால் வானம் பூமி காற்று கடல் கூட இந்த அபாண்டம் தாங்காது..

#சும்மா கிடப்பதை இப்போ எதுக்கு சீண்டுற.. மது# ரீடர்ஸ் வாய்ஸ்..

அடிச்சு திருத்தி புதுசா போட்டு டைப் டைப்போ டைப் பண்ணி ஈவு இரக்கமே இல்லாது அனுப்பிவிட்டாள்.. சீரியல் வில்லி முகம் வச்சு .. சிரிப்பு..

மெசேஜ் படிச்சிட்டு கால் பண்ணுவல்ல மாமா அப்போ உனக்கு இருக்கு உனக்கு கச்சேரி

மது நிம்மதியா குப்புறக்க படுத்து செம்ம தூக்கம்.. மீன் வலையில் தானா சிக்கும்ன்னு ஓர் கணக்கு..

செய்தி கண்ட அங்கு ஆதியின் முகமோ கோவைப்பழம் போல கோபத்தில் சிவந்து துடித்துக்கொண்டிருந்தது..

பழி வாங்கிட்டா.. தெரிஞ்சி போச்சு

‘இப்போ நான் என்ன பண்ணுவேன்? ஒரு மண்ணும் புரியல.. இந்த லூசு ரிபோட் அனுப்பியாச்சு,
இத படிக்காம நன் அவகிட்ட கேள்வியும் கேக்க முடியாது ,
என நறநறவென பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான்..

ஏனெனில் இவள் அனுப்பிய அபிசியல் லெட்டர் தூய தமிழில் !
அவனுக்கு தமிழ் சரியா படிக்க வராது! பள்ளியில் ஃப்ரெஞ்ச் இரண்டாவது மொழி யாக தேர்ந்தெடுத்து படித்தவன் கல்லூரி மற்றும் MBA அனைத்தும் ஆஸ்திரேலியாவில்.
எனவே தமிழுக்கும் அவனுக்கும் ரொம்ப தூரம்..

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் MM வர்த்தக நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதில்,
அவர்கள் முன்னரே தகவல் சொல்லாமல் வந்தமைக்காக மன்னிப்பு கோரி ,
வருத்தம் தெரிவித்து, தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்தமைக்காக மீண்டும் மன்னிப்பு கோரி, நாளைக் காலை தங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதல் உள்ள அலுவலி
மதுமதி

ஒரு வழியாக கூகிள் ஆண்டவரை சரணடைந்து மொழிப்பெயர்ப்பு செய்து புரிந்து கொண்ட பிறகு ஆசு வாசப்பட்டவன்

மணியை பார்க்க அது இரவு பதினொன்று முப்பது காட்டியது, நொந்தே போய்விட்டான் ஆதி.. ‘இந்த லூச இப்படியே விட்டா எப்படி?இப்போ திட்டுற திட்டில் இனிமே எல்ல வகையிலும் பெர்பக்டா இருக்கனும் ‘என்று நினைத்தவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் அழைக்க,

அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே.. ரிங் டோன் ஆக ஒலிக்க, அவன் மனதுள் ஏதேதோ எண்ணங்கள் வந்து போக ,

இதிலெல்லாம் விவரம் தான் பயபுள்ள.. கடுப்பாகி வைத்து விடலாம் என நினைக்கையில் அந்தப்பக்கம் மது..

“ஹலோ ஆதிசார் ”
“ஆதிசார் லைன்ல தான் இருக்கீங்களா சார்” என கத்திக்கொண்டு இருப்பது கேட்க

“யாஐ அம் இந்த லைன்.. உன்னோட மெசேஜ் படிச்சு பார்த்தேன்நாளைக்கு ஆபீஸ்ல சந்திக்கலாம் பை” என வைத்துவிட

‘என்னடா இது சிங்கம் சிம்பிளா தலைவாரி விட்டு போகுதே பின்னாடி ஏதாவது பெருசா ப்ளான் பண்ணி இருக்குமோ? என நினைத்தவள்

‘இல்ல இல்ல மாமா அப்படி எல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டான் இன்னொரு மனம் கூற
அவன் ஒன்னுமே நினைக்கவே இல்லை என்கிறது தானே பிரச்சனையே என மனம் இடித்துரைக்க..

ஒருவேளை ரிங் டோன் கேட்டதும் பயபுள்ள ஆப் ஆயிடுச்சு ஆயிடுச்சு போல ம்ம்ம்..

எதுவானாலும் நாளைக்கு தெரியப்போகுது அதுக்குள்ள எதுக்கு மண்டை உடைச்சிங்? உறங்க சென்றுவிட்டாள் .

மறுநாள் அலுவலகத்தில்
டேம் இட்
என்ன தைரியம்? யார் இப்படி பண்ணியது? ஹூ இஸ் தட் பிளாக் ஷீப்?
என ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தான் ஆதித்யா

அவன் கத்தியது அவன் கேபின் தாண்டி வெளியே கேட்டது
இங்கு மதுவோ மிகக் கூலாக தன் வேலையில் கவனமாக இருப்பது போல் தனது டேபிளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தாள் முகத்தில் மட்டும் புன்சிரிப்பு..

மாமா ஓ மாமா.. கூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *