அள்ளி அணைத்திட வா மாயவா-1

அள்ளி அணைத்திட வா மாயவா

அள்ளி அணைத்திட வா மாயவா-1

அள்ளி அணைத்திட வா மாயவா-1

அள்ளி அணைத்திட வா மாயவா 2

அள்ளி அணைத்திட வா மாயவா 2

அள்ளி அணைத்திட வா மாயவா 3

அள்ளி அணைத்திட வா மாயவா 3

அள்ளி அணைத்திட வா மாயவா 4

அள்ளி அணைத்திட வா மாயவா 4

அள்ளி அணைத்திட வா மாயவா-1

வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலை போல வெளிச்சம் பாரு

டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு
ஊடு மேல பல்ப பாரு
பல்பு காட்டும் கலர பாரு
கண்ணு கூசும் காட்சி பாரு
காசு செய்யும் வேல பாரு
கட்டு கட்டா நோட் அடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு

கட்டு கட்டா நோட் அடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு

ஊத்திக்கினு கடிச்சிக்கவா
கடிச்சிக்கினு ஊத்திகவா

போத்திக்கினு படுத்துகவா
படுத்திக்கினும் போத்திக்கலாம்

யக்கூ யக்கூ………என அழைப்பு ஓசை அடங்கும் வரையிலும் படுக்கையிலேயே கனவில் தர லோக்கல் குத்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தாள் ஆதிரை. பாட்டு நின்றதும் மெல்ல கையால் படுக்கையை தடவியவள் அலைபேசியை கண்டுபிடித்து, ஒற்றை கண்ணால் மணி பார்த்தாள்…ஆதிரை…ஆதி…ஆரா என செல்ல பெயர்களுக்கு சொந்தக்காரி.

ஆராவுக்கு மணி பார்க்க வேண்டிய அவசியமே இல்லை…அழைத்ததே அவங்க வீட்டின் அலாரம், அவங்க அப்பா திருவாளர் சண்முகம் தான்.காலை 10 மணிக்கு வெளியே போக வேண்டும் என்றால்..8 மணிக்கே உணவும் முடித்து வரவேர்ப்பறையில் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட அலாரத்துக்கு பிறந்த ஓட்டை கடிகாரம் தான் ஆதிரை.மணி 6 என கண்டதும் இரு கண்களையும் விரித்து பார்த்தவள்…தன் அருகில் உள்ள படுக்கையில் ஜூனித்தாவை தேடினாள். இது அவளின் தொழுகை நேரம்…தினமும் 5.30 மணிக்கே குளித்து தொழுகைக்கு தயாராகி விடும் வழக்கம் கொண்டவள்…ஆராவின் அறை தோழி…அந்தரங்க தோழி…அதிசய தோழி….அமைதி தோழி….இல்லையா பின்ன…ஆரா மாதிரி ஆர்டர் கொடுத்து செஞ்ச பீஸுக்கு அளவெடுத்து செஞ்ச அருமையான பீஸு தான் ஜூனித்தா.

ஆரா இந்த விடுதிக்கு வருவதற்கு முன், ஒற்றை ஆளாய் நிம்மதியாய் இருந்தாள் ஜூனி… அதுல மிளகாய் வைச்சு அரைக்கவென ஆண்டவன் அனுப்பிய அராத்து தான் ஆரா.

ஆரா இந்த அறைக்கு வந்து அலறியதோடு ஜூனி நிறுத்திக்கொண்டாள்… போக போக ஆராவின் அட்டகாசத்திற்கு பழகியும் விட்டாள். அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே மொட்டை மாடிக்கு வந்த ஆரா…தன் அப்பாவிற்கு அழைத்தாள்.

அப்பா எதிர்முனையில்…

ஆரா…இன்னுமா தூங்குற? வேலைக்கு கிளம்ப வேணாமா? கொஞ்சம் கூட இன்னும் உனக்கு பொறுப்பே வரலனு உன் அம்மா சொல்றது சரியா தான் இருக்கு…

அப்பா…அம்மா சொல்றத கேக்காதீங்க.. இதை நான் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றேன்…நீங்க கேக்கரதே இல்லப்பா…நான் கிளம்பி டீயை எடுக்க போயிட்டு இருக்கேன்….அப்புறம் ஜூனி தொழுகை பண்ராப்பா…. வைங்க நான் அலுவலகம் போனதும் மெசேஜ் பண்றேன்…வைக்குறேன்…என அடுத்த திட்டுக்கு இடம் கொடுக்காமல் வைத்துவிட்டாள். பெருமூச்சை பெருசாக வெளியேற்றியவள்…ஜூனி தொழுகை முடித்து கொண்டுவந்திருந்த டீயை…பல் துலக்கி விட்டு..முகம் கழுவி விட்டு அருந்த வந்தாள்.

ஜூனி செல்லம்…சும்மா சொல்லக்கூடாது…நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ…நீ எனக்கு ரூமியா வந்திருக்க. சிலாகித்துக்கொண்டு அருந்தினாள்.

எருமை மாடு…ஏன் சொல்ல மாட்ட…எல்லாம் நான் வாங்கி வந்த சாபம்….உன்னை மாறி இம்ஸை கிட்ட தினம் தினம் சின்னாபின்னமா ஆகணும்னு விதி இருக்கு…ஒழுங்கா குடிச்சுட்டு என் கப்பையும் சேர்த்து கழுவிட்டு குளிக்க போ…நான் பிரேக்பாஸ்ட் எடுத்து வைக்குறேன்…என புன்னகையோடு…விடுதி சமையல்கட்டு நோக்கி நடந்தாள்.

அதன் பிறகு நேரம் ஓடிக்கொண்டிருக்க …ஆரவும் தயார் ஆகி உணவு உண்டு…அலுவலகம் கிளம்பி ஜூனியுடன் கீழே வந்தாள்… நம் ஆரா வேரா என்னத்த படிச்சுருக்க போறாங்க…எல்லாம் பாழாப்போன என்ஜினீயர் தான்…வேலை பார்ப்பது பிரபல மென்பொறி நிறுவனத்தில் நெட்வொர்க்கிங் பிரிவில்…ட்ரைனி.. சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருக்கு…அலுவலக காரிலேயே போய் வரும் வசதி உண்டு என்பதால்…க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அலுவலகத்துக்கு..இவள் எழும்பூரில் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தாள்…எல்லாம் அவுங்க அப்பா கூடவே வந்து ஒருநாள் முழுக்க அலைந்து திரிந்து சேர்த்துவிட்டு போய்விட்டார்.

ஜூனி கண் சிகிச்சைக்கு டிப்ளமோ படித்து விட்டு…சங்கர நேத்ராலயாவில் கண் மருத்துவரின் உதவியாளராக வேலை செய்கிறாள்…கடந்த 5 வருடமாக ஒரே விடுதியில் தங்கி இருப்பதால் பல சலுகைகள் உண்டு…ஆனால் ஒரு போதும் தன் நெறி தவராதவள்.. ஆரா வந்த புதிதில் ஜூனி அலறியே விட்டாள்.. காரணம் நம்ம மஞ்ச மாதாவின் வாய் ஓயாமல் வளவளத்துக்கொண்டிருந்தது தான்…இருவரும் அடிப்படை குணம் நேர்மை எருமை கருமை கடமை என்பதால் ஒத்துப்போயிற்று….மற்றபடி ஜூனி அமைதி…ஆரா அலையோசை…ஓயாமல் ஆர்பரித்துக்கொண்டே இருப்பாள்..

கீழே வந்தவள் அலைபேசி திரையில் ஓட்டுனரின் எண்ணை பார்த்ததும் ..விடுதி விட்டு கிளம்பி ரோட்டிற்கு போனாள்…. உடன் ஜூனியும் சேர்ந்து கொண்டாள்… அவள் பேருந்தில் சென்றுவிடுவாள்… தெருமுனை வரை ஒன்றாக செல்வது பழகி இருந்தது.

ஜூனிக்கு பை சொல்லி கிளம்பியவள்…ஓட்டுனரிடம்…வணக்கம் சொல்லி விட்டு…பேசிக்கொண்டே பயணத்தை அலுவலகம் நோக்கி தொடர்ந்தாள்.இன்று அவளுக்கு வைத்திருக்கும் சோதனை தெரியாமல்.

இவளை ஓய வைத்த காலமும் உண்டு….ஓய்ந்து போக வைக்கப்போகும் காலமும் உண்டு…இன்று வருவான் இவளை ஆட்டுவிக்க போகும் மாயவன்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *